செய்தி செய்தி

தமிழ்நாடு

அணையில் 4 லட்சம் மீன்குஞ்சுகள் விடுவிப்பு: 10 மாதங்களில் வளர்ந்த மீன்கள் பிடிப்பு

Added : நவ 25, 2021
Share
Advertisement
ஆனைமலை: ஆழியாறு அணையில், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தினர், 4 லட்சம் மீன் குஞ்சுகள் விடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.கோவை மாவட்டத்தில், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழகம் சார்பில், 24 மீன் விற்பனை அங்காடிகள் நடத்தப்படுகிறது. இதில், பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் மட்டுமே, பொள்ளாச்சி, ஆழியாறு, ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், 13 கடைகள் உள்ளன.இந்த கடைகள் வாயிலாக மக்களுக்கு, கட்லா, ரோகு

ஆனைமலை: ஆழியாறு அணையில், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தினர், 4 லட்சம் மீன் குஞ்சுகள் விடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.கோவை மாவட்டத்தில், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழகம் சார்பில், 24 மீன் விற்பனை அங்காடிகள் நடத்தப்படுகிறது. இதில், பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் மட்டுமே, பொள்ளாச்சி, ஆழியாறு, ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், 13 கடைகள் உள்ளன.இந்த கடைகள் வாயிலாக மக்களுக்கு, கட்லா, ரோகு மற்றும் மிர்கால் வகை மீன்களை விற்பனை செய்கின்றனர். ஆழியாறு அணையில் இருந்து மீன்கள் பிடிக்கப்பட்டு, 24 கடைகளுக்கும் அனுப்பப்படுகிறது.இந்நிலையில், கடந்த ஓராண்டாக ஆழியாறு அணையில் தொடர்ந்து மீன்களின் வரத்து பெரும் அளவு குறைந்துள்ளது. இதை சரிசெய்ய, ஆழியாறு மீன் பண்ணையில் வளர்க்கப்படும் மீன் குஞ்சுகளை, அணைப்பகுதியில் விடும் பணியை மீன் வளர்ச்சிக்கழகத்தினர் துவங்கியுள்ளனர்.
நேற்று காலை முதல், பண்ணையில் மீன் குஞ்சுகள் பிடிக்கப்பட்டு அணையில் விடப்பட்டு வருகிறது.தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழக, ஆழியாறு அணை மேலாளர் மாசிலாமணி கூறியதாவது:ஆழியாறு அணையில், 3.5 - 4 லட்சம் மீன் குஞ்சுகள் வரையில் விடலாம். நான்கு கட்டங்களாக மீன் குஞ்சுகள் விடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பண்ணையில், 90 நாட்கள் வரையில் வளர்க்கப்பட்ட மீன் குஞ்சுகள் அணையில் விடப்படுகிறது.ஏழு முதல் பத்து மாதங்களில் இவை வளர்ந்து பிடிப்பதற்கு தயாராகும். மேலும், பண்ணைகளில் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு, வரும், ஜூன் மாதம் மக்களுக்கு விற்பனை செய்யப்படும். 60 நாட்கள் வளர்க்கப்பட்ட மீன் குஞ்சு ஒன்று, இரண்டு ரூபாய்க்கு மக்களுக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X