சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

முதல்வரின் இன்னொரு முகம்!

Added : நவ 25, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
முதல்வரின் இன்னொரு முகம்!பா.விஜய், காட்டிகன், சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்தின் சுவிட்சர்லாந்து' என்று அழைக்கப்படும் நீலகிரியில், விதிமீறல் கட்டடங்கள் அதிகமாகிப் போனதால், உச்ச நீதிமன்றமே தலையிட்டு சில சட்ட விதிமுறைகளை அறிவித்தது. அதை, மாவட்ட ஆட்சியர் மூலம் நிறைவேற்றவும் ஆணையிட்டது.நீலகிரியின், 113வது கலெக்டராக, 2017ல்


முதல்வரின் இன்னொரு முகம்!பா.விஜய், காட்டிகன், சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்தின் சுவிட்சர்லாந்து' என்று அழைக்கப்படும் நீலகிரியில், விதிமீறல் கட்டடங்கள் அதிகமாகிப்
போனதால், உச்ச நீதிமன்றமே தலையிட்டு சில சட்ட விதிமுறைகளை அறிவித்தது. அதை, மாவட்ட ஆட்சியர் மூலம் நிறைவேற்றவும் ஆணையிட்டது.
நீலகிரியின், 113வது கலெக்டராக, 2017ல் இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்பட்டார். பொறுப்பேற்ற நாளிலிருந்தே, தன் பணியை சிறப்பாக மேற்கொண்டார்.சட்டத்திற்குப் புறம்பாக ஆழ்துளைக் கிணறு தோண்டுதல், மரம் கடத்தல் ஆகியவற்றை தடுத்தார்; -பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்தார்.-சீகூர் யானை வழித்தடத்தில் இருந்த, 39 ஓட்டல்கள் மூடல் மற்றும் மின் வேலி அமைக்கத் தடை ஆகியவற்றில்
உறுதியுடன் செயல்பட்டார்.அவரின் அதிரடி நடவடிக்கைகள் நன்மை பயப்பதாகவே அமைந்ததால், மக்களிடம் ஆதரவு பெருகத் துவங்கியது.அரசியல்வாதி மற்றும் சினிமாதுறையினர், அவர்களின் உறவினர் மற்றும், 'பினாமி'கள் தான் யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து, சீகூர் மற்றும் மசினகுடி பகுதிகளில், 7,000 ஏக்கரில், 821 கட்டடங்களை அனுமதியின்றி
கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.சிலர், தங்கள் கட்டடங்கள் யானை வழித்தடத்தில் இல்லை என கூறுமாறு, கலெக்டருக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்; அதற்கு அவர் செவி சாய்க்கவில்லை என்பதால், மிரட்டலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தகவல்கள் பரவுகின்றன.
இந்நிலையில் தமிழக அரசு, 'நிர்வாக ரீதியில் அவசர மாற்றம் செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றமும், நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய
அனுமதி வழங்கி உத்தரவிட்டது.யானை வழித்தடத்தில், விதிமீறி கட்டியுள்ள கட்டடங்களை அகற்றுவதில் இன்னசென்ட் திவ்யா தீவிரமாக செயல்பட்ட நிலையில், அவரை இடமாற்றம் செய்ய, தி.மு.க., அரசு அவசரம் காட்டுவது ஏன்?
நல்ல அதிகாரிகளை, தேடித் தேடி பணியமர்த்தும் முதல்வர் ஸ்டாலின், நீலகிரி விஷயத்தில் தன் இன்னொரு முகத்தை காட்டுகிறாரா?உண்மையிலேயே நல்லாட்சி தர, முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார் என்றால், நீலகிரி கலெக்டர் விஷயத்தில் நேர்மையான, நல்ல முடிவு எடுப்பார் என, நம்புகிறோம்.
மாறாக, ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவான முடிவு எடுக்க துணை போனார் என்றால், அதற்கான எதிர்வினையை, அவர் மட்டுமின்றி தமிழகமும் அனுபவிக்கும்.


தி.மு.க., அரசு திருந்த வேண்டும்!கே.ஆர்.அனந்த பத்மநாபன், சென்னையிலிருந்து அனுப் பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த ஆண்டு பருவ மழைக்கு முன், பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., அரசு சிறப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டது; அதனால், அப்போது சென்னை மாநகரம் வெள்ளத்தில் சிக்கவில்லை.
சட்டசபை தேர்தல் நெருங்கியதால், அன்றைய அ.தி.மு.க., அரசு இப்பணியை சிறப்பாக செய்திருக்கலாம்.ஆனால், தி.மு.க., அரசு இந்த முறை கால்வாய்களை துார் வார தவறி விட்டது. பருவ மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இப்போது சென்னை தத்தளிப்பதற்கு, தி.மு.க., அரசின் அலட்சியமே காரணம்.
மழை வெள்ளத்தில் மக்கள் தவிக்கின்றனர்; அதற்கான பழியை, கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் மீது போட்டு தப்பிக்க நினைக்கிறது, தி.மு.க., அரசு.கடந்த ஆண்டு ஏரி, குளங்கள், வரத்து கால்வாய் அனைத்தும் துார் வாரப்பட்டன. மழை நீர், தடையின்றி நீர்நிலையில் சேகரமாகியது. அந்த ஆண்டு அதிகளவு மழை பெய்தும், மக்கள் பாதிக்கும்படி எங்கும் வெள்ளம் தேங்கவில்லை.
ஆண்டுதோறும் துார் வார வேண்டும் என்பதை மறந்த தி.மு.க., அரசு, இப்போது அ.தி.மு.க., மீது பழி போடுவது ஏற்புடையது அல்ல.பருவ மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற உண்மையை ஏற்று, தி.மு.க., அரசு அடுத்த ஆண்டாவது திருந்த வேண்டும்.


ஒரே ஒரு வில்லனால்...கி.ரமேஷ், நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நம் நாட்டின் ஹீரோவாக சர்தார் வல்லபபாய் படேல் இருந்த போது, முகமது அலி ஜின்னா வில்லனாக இருந்தார். எனினும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ஜின்னாவை புகழ்ந்து பேசி வருகிறார். அது, சர்தார் படேலை அவமதிக்கும் செயலாகவே கருதப்படும்' என்று உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்
கூறியுள்ளார்.சர்தார் வல்லபபாய் படேல் நம் நாட்டின் ஹீரோவாக இருந்த போது, முகமது அலி ஜின்னா வில்லனாக இருந்தார் என்று, யோகி ஆதித்யநாத் சுட்டிக் காட்டுகிறார்.அந்த முகமது அலி ஜின்னா மட்டும் வில்லனாக மாறாமல், சர்தார் வல்லபபாய் படேலுடன் இணைந்து, துணை ஹீரோவாக தன்னை மாற்றியிருந்தால், என்னென்ன விஷயங்கள் நடந்திருக்கும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போமா?நம் நாட்டில் இருந்து, 'மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான்' என்று பிரிந்திருக்காது; இந்தியா அகண்ட பாரதமாக இருந்திருக்கும்.
காஷ்மீரை சொந்தம் கொண்டாட பாகிஸ்தான் படையெடுத்து வந்த நிலை ஏற்பட்டிருக்காது.காஷ்மீர் வாழ் பண்டிட்டுகள், அங்கிருந்த சொத்து சுகங்களை இழந்து, விரட்டியடித்து, சொந்த நாட்டிலேயே அகதிகளாக அலைய வேண்டிய அவலம் நேர்ந்திருக்காது.மே.வங்கத்தில் ஹிந்து - -முஸ்லிம் கலவரம் நடந்திருக்காது; லட்சக்கணக்கான மக்களின் உயிர் பறி போயிருக்காது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டிய அவலம் நேர்ந்திருக்காது. காஷ்மீர் எல்லையை பாதுகாப்பதற்காக, லட்சக்கணக்கான கோடி ரூபாய்களையும், லட்சக்கணக்கான ராணுவ வீரர்களையும் பறி கொடுத்திருக்க வேண்டிய
துர்பாக்கியம் நேர்ந்திருக்காது.அகண்ட பாரதத்தை கண்டு அஞ்சி, சீனாவும் நம் மீது படை எடுக்க முயன்று இருக்காது. முக்கியமாக நாட்டில் மத மாற்றம் செய்யும் முயற்சிகள் தோன்றியே இருக்காது.ஹிந்துக்களும், -இஸ்லாமியரும் சகோதர மனப்பான்மையோடு வாழ்ந்து இருப்பர். கோவை, மும்பை உட்பட நாட்டில் எந்த இடத்திலும்
பயங்கரவாத செயல் நிகழ்ந்திருக்காது.முக்கியமாக தமிழகத்தில் தி.க., - தி.மு.க., - அ.தி.மு.க., - ம.தி.மு.க., - தே.மு.தி.க., போன்ற பிராந்தியக் கட்சிகள் உருவாகி இருக்காது.இன்னும் இது போல நிறைய சொல்லலாம்... ஒரே ஒரு வில்லனின் பேராசைக்காக, நம் நாடு எவ்வளவு இன்னல்களையும், பொருளாதார நஷ்டங்களையும்,
விரோதிகளையும், துரோகிகளையும் சந்தித்துள்ளது பாருங்கள்!

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
26-நவ-202119:31:39 IST Report Abuse
D.Ambujavalli மேமாதமே அரசு அமைந்தும், ஆறு மாதத்தில் மழைக்காலம் வரும் என்று எதிர்பார்த்து தூர் வாரி, அணைகள் சேவைப்படுத்த போதிய காலம் இருந்தும், சும்மா வேண்டாத 'நலத்திட்டங்கள்' நாடகம் நடத்திவிட்டு, 'நாங்கள் வந்து ஆறுமாதம் தான் ஆகிறது' என்று மூக்கால் அழுவதா இவர்களைத் தேர்ந்தெடுத்தோம் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X