கவன சிதறல்களை தடுக்க அறிவுரை

Added : நவ 25, 2021
Share
Advertisement
உடுமலை: மாணவர்களின் நடவடிக்கைகளை பெற்றோர்கள், முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என, புரிந்துணர்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.உடுமலை அடுத்த கொமரலிங்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 840 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்நிலையில், உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்பில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில், பெற்றோர் ஆசிரியர் புரிந்துணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

உடுமலை: மாணவர்களின் நடவடிக்கைகளை பெற்றோர்கள், முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என, புரிந்துணர்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.உடுமலை அடுத்த கொமரலிங்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 840 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்நிலையில், உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்பில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில், பெற்றோர் ஆசிரியர் புரிந்துணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. தலைமையாசிரியர் மாரியப்பன், தலைமை வகித்தார்.கூட்டத்தில், ஆசிரியர்கள், மாணவர்களின் மனநிலையை அறிந்து, பாடங்களைப் புரிய வைக்கின்றனர். கற்றல் ஆற்றலை அறிதல், தனித்திறமைகளை கண்டறிதல், ஊக்கப்படுத்துதல், தேவையான உதவிகளை செய்தல் போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.இதே மனநிலை பெற்றோர்களிடமும் இருத்தல் வேண்டும். பெற்றோர் ஆசிரியர்கள் இடையே நல்லுறவு மிகவும் அவசியம். அப்போது மட்டுமே, மாணவர்களை பாதிக்கும் தனிப்பட்ட பிரச்னைகளையும், ஆசிரியர்களிடம் பகிர்ந்து, சுமூக தீர்வு காண முடியும். மாணவர்களின் நடவடிக்கைகளை பெற்றோர், முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.தேர்வு நெருங்கும் நாட்களில், மாணவ, மாணவியர், 'டிவி' பார்த்தல், மொபைல்போன் பயன்பாட்டை தடுத்தல் போன்ற கவனசிதறல்களுக்கு தடை போட பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. இதில், உதவி தலைமையாசிரியர் செந்தில்குமார், ஆசிரியர்கள் ரமேஷ், சித்ரா, அலமேலுமங்கை, மகுடீஸ்வரன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X