செய்தி செய்தி

தமிழ்நாடு

படகு சவாரி முடங்கி பல வருஷமாச்சு!

Added : நவ 25, 2021
Share
Advertisement
உடுமலை: உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. திருமூர்த்தி அணை, பஞ்சலிங்க அருவியுடன், அமணலிங்கேஸ்வரர் கோவிலும் உள்ளது. இதனால், விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில், இப்பகுதிக்கு சுற்றுலா வருவோர் எண்ணிக்கை அதிகம்.சிறந்த சுற்றுலா தலமான திருமூர்த்திமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், அணையின் அழகை கண்டு ரசிக்கும் வகையில், தளி பேரூராட்சி

உடுமலை: உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. திருமூர்த்தி அணை, பஞ்சலிங்க அருவியுடன், அமணலிங்கேஸ்வரர் கோவிலும் உள்ளது. இதனால், விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில், இப்பகுதிக்கு சுற்றுலா வருவோர் எண்ணிக்கை அதிகம்.சிறந்த சுற்றுலா தலமான திருமூர்த்திமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், அணையின் அழகை கண்டு ரசிக்கும் வகையில், தளி பேரூராட்சி சார்பில், 1990ல் படகு சவாரி துவக்கப்பட்டது. தொடர்ந்து, படகு சவாரியை இயக்க, 2002ல், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில், தளி பேரூராட்சி சார்பில் 15 பேர் பயணம் செய்ய கூடிய மூன்று படகுகளும், 4 பேர் மற்றும் 2 பேர் செல்லக்கூடிய பெடலிங் படகுகளும் வழங்கப்பட்டன.படகு சவாரி மூலம் கிடைக்கும் வருவாயில், தளி பேரூராட்சி 25 சதவீதம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 75 சதவீதம் என, பகிர்ந்து கொள்ளப்பட்டு வந்தது.சவாரி முடக்கம்சிறந்த சுற்றுலா தலமாக கருதப்படும் திருமூர்த்தி மலையில், படகு சவாரி முடங்கி, பல ஆண்டுகளாகிறது. படகுகளில், பழுது ஏற்பட்டால், அவற்றை சீரமைப்பது உட்பட பல்வேறு பணிகளுக்கு, பேரூராட்சி நிர்வாகம் ஒத்துழைக்கவில்லை என அப்போது, மகளிர் சுய உதவிக்குழுவினர் தரப்பில், தெரிவிக்கப்பட்டது.பேரூராட்சி தரப்பில், நேரடியாக படகுகளை இயக்கவும் முயற்சிக்கப்பட்டது. இவ்வாறு, நிறுத்தப்பட்ட படகு சவாரி பல ஆண்டுகளாகியும், மீண்டும் இயக்கத்துக்கு வரவில்லை. அணை கரையில், ஓரம் கட்டப்பட்ட படகுகள் பயன்பாடின்றி, பரிதாப நிலையில் உள்ளது. மீண்டும் பயன்படுத்த முடியாத நிலைக்கு படகுகள் மாறியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திருமூர்த்திமலையில், சுற்றுலாவை மேம்படுத்த, பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக தெரிவிக்கும், சுற்றுலா துறையும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆர்வத்தோடு வரும் சுற்றுலா பயணிகளும், ஏமாற்றத்தோடு திரும்பி செல்கின்றனர். இப்பிரச்னைக்கு, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தினர், நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X