சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

அரசியல் வெற்றிக்கு ஆலோசகர் தேடும் நடிகர்!

Added : நவ 25, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அரசியல் வெற்றிக்கு ஆலோசகர் தேடும் நடிகர்!நாளிதழை மடித்தபடியே, ''தாறுமாறா அபராதம் விதிக்காரு வே...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அண்ணாச்சி.''யாரைச் சொல்றேள்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''பொதுமக்களுக்கு இடையூறு தர்றவங்க மேல, போலீசார் மாநகர காவல் சட்டப் பிரிவு 75ன் கீழ் வழக்கு பதிவு செய்து, அபராதம் போட்டு அனுப்புவாவ... ஆனா, தாம்பரம் ஸ்டேஷன் அதிகாரி ஒருத்தர்,

 டீ கடை பெஞ்ச்


அரசியல் வெற்றிக்கு ஆலோசகர் தேடும் நடிகர்!



நாளிதழை மடித்தபடியே, ''தாறுமாறா அபராதம் விதிக்காரு வே...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அண்ணாச்சி.

''யாரைச் சொல்றேள்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''பொதுமக்களுக்கு இடையூறு தர்றவங்க மேல, போலீசார் மாநகர காவல் சட்டப் பிரிவு 75ன் கீழ் வழக்கு பதிவு செய்து, அபராதம் போட்டு அனுப்புவாவ... ஆனா, தாம்பரம் ஸ்டேஷன் அதிகாரி ஒருத்தர், கூலித் தொழிலாளிகள், மார்க்கெட் வியாபாரிகளை பிடிச்சு, ஸ்டேஷனுக்கு தள்ளிட்டு
போயிடுதாரு வே...

''அவங்களிடம் பெயர், முகவரி, மொபைல் போன் நம்பர்களை வாங்கிட்டு, அபராதம்னு 3,000த்துல இருந்து 5,000 ரூபாய் வரைக்கும் கறந்துட்டு அனுப்பிடுதாரு... 75 பிரிவுல வழக்கு போட்டா, 1,000 ரூபாய்க்குள்ள தான் அபராதம் விதிக்கணும்... மீத தொகையை, போலீஸ் அதிகாரி
அமுக்கிடுதாரு வே...

''இந்த வருஷம் 11 மாசத்துல, 330 பேரை பிடிச்சு அபராதம் வசூலிச்சும், 52 பேர் மேல மட்டுமே வழக்கு பதிவு பண்ணி, கோர்ட்ல அபராதம் கட்டி வச்சிருக்காரு... மத்தவங்களிடம் வசூலிச்ச பணத்தை சுருட்டிட்டாரு வே...'' என்றார் அண்ணாச்சி.

''கார்த்திகேயனை இன்னும் காணுமே...'' என, தெருவை பார்த்து முணுமுணுத்த அன்வர்பாயே, ''உளவுத்துறை விசாரணை நடக்குது பா...'' என்றார்.

''தீவிரவாதிகளை பத்தி விசாரிக்கிறாங்களா...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''இல்லை... சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தல்ல போட்டியிட, வார்டு வாரியா தி.மு.க.,வினர் விருப்ப மனு குடுத்துட்டு இருக்காங்க பா...

''திருவல்லிக்கேணி பகுதியில ரேஷன் கடை, டாஸ்மாக் பார்கள் விவகாரத்துல அப்பகுதி ஆளுங்கட்சி நிர்வாகி, பொதுமக்களிடம் அதிருப்தியை சம்பாதிச்சு வச்சிருக்கார்... அதேபோல, மயிலாப்பூர், அடையாறு பகுதியில ரேஷன் கடைகள், தொழில் நிறுவனங்கள்ல மாமூல் கேட்டு மிரட்டியதால, வட்ட செயலர்கள் பெயர்கள் ரிப்பேராகிகிடக்குது பா...

''இதனால, வட்டச் செயலர்கள் பற்றி விசாரிக்கும்படி, உளவுத்துறைக்கு ஆட்சி மேலிடம் உத்தரவு போட்டிருக்குது... கெட்ட பெயர் இல்லாத கட்சியினருக்கு தான் 'சீட்' தருவாங்கன்னு அறிவாலய வட்டாரத்துல பேசிக்கிறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''அரசியலுக்கு ஆலோசகர் தேடிண்டு இருக்கார் ஓய்...'' என்றார் குப்பண்ணா.''யாருக்கு ஆலோசகர் வேணுமாங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''அரசியல் கட்சி துவங்கற விஷயத்துல, அப்பா கூட முட்டிண்ட நடிகரை தான் சொல்றேன்... சமீபத்துல நடந்த உள்ளாட்சி தேர்தல்ல, இவரது ரசிகர்கள் சில இடங்கள்ல ஜெயிச்சுட்டால்லியோ... ''இதனால, 'நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்லயும் போட்டியிடணும்... அப்ப தான், அடுத்து வர்ற சட்டசபை தேர்தல்ல நீங்க முதல்வர் வேட்பாளரா களம் இறங்க சரியா இருக்கும்'னு, ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலர் நடிகருக்கு துாபம் போட்டிருக்கா ஓய்... ஆசை யாரை விட்டதுங்காணும்...

''இதனால, தேர்தல் வெற்றிக்கு வியூகம் வகுத்து தர, நல்ல அரசியல் ஆலோசகர் ஒருவரை நடிகர் தேடிண்டு இருக்கார்... 2016 சட்டசபை தேர்தல்ல, மாம்பழக் கட்சிக்கு ஆலோசனை தந்தவர் மற்றும் இலை கட்சிக்கு ஆலோசனை தந்தவரிடம் பேச்சு நடத்திண்டு இருக்கார் ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.

''விஜயகாந்த், கமல்ஹாசன் கதியை பார்த்த பிறகும், இவங்களுக்கு புத்தி வர மாட்டேங்குதே...'' என, அண்ணாச்சி முணுமுணுத்தார்.டீக்கடை ரேடியோவில், 'என்னை தாலாட்ட வருவாளா...' என்ற 'மெலடி சாங்' ஒலிக்க, பெரியவர்கள் ரசிக்க ஆரம்பித்தனர்.

****************************

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
26-நவ-202105:26:58 IST Report Abuse
NicoleThomson அதிமுக க்கு சுனில் வேலை செஞ்சாரு , பாமக க்கு யாரு சார் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X