இதே நாளில் அன்று

Added : நவ 25, 2021
Share
Advertisement
இதே நாளில் அன்றுநவ., 26, 1921கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் 1921 நவம்பர் 26ம் தேதி பிறந்தவர், வர்கீஸ் குரியன். சென்னை லயோலா கல்லுாரியில், இயற்பியல் பட்டம் பெற்றார். பின், இயந்திரவியல், உலோகவியல், கால்நடை பொறியியல் துறைகளில் பட்டம் பெற்றார்.சுதந்திரப் போராட்ட வீரர் திரிபுவன்தாஸ் அழைப்பை ஏற்று, குஜராத்தின் ஆனந்த் எனும் இடத்தில் உள்ள பால் உற்பத்தி தொழிற்கூடத்தை முழுமையாக
 இதே நாளில் அன்று



இதே நாளில் அன்று

நவ., 26, 1921

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் 1921 நவம்பர் 26ம் தேதி பிறந்தவர், வர்கீஸ் குரியன். சென்னை லயோலா கல்லுாரியில், இயற்பியல் பட்டம் பெற்றார். பின், இயந்திரவியல், உலோகவியல், கால்நடை பொறியியல் துறைகளில் பட்டம் பெற்றார்.சுதந்திரப் போராட்ட வீரர் திரிபுவன்தாஸ் அழைப்பை ஏற்று, குஜராத்தின் ஆனந்த் எனும் இடத்தில் உள்ள பால் உற்பத்தி தொழிற்கூடத்தை முழுமையாக மேம்படுத்தினார். அங்கு உருவான, 'ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெட்' என்ற, 'அமுல்' நிறுவனம் பெரும் வெற்றி கண்டது.மத்திய அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, கூட்டுறவு பால் உற்பத்தித் திட்டத்தை, மாபெரும் தேசிய திட்டமாக மாற்றி வெற்றி பெற வைத்தார். 24 மாநிலங்களில், 200 பால் பண்ணைத் தொழிற்கூடங்கள், 12 ஆயிரம் கிராமக் கூட்டுறவு சங்கங்கள் என, 'அமுல்' தன் கிளையை அகல விரித்துள்ளது. 2012- செப்டம்பர் 9ம் தேதி, தன் 90வது வயதில் காலமானார்.
'இந்திய வெண்மைப் புரட்சி நாயகன்' வர்கீஸ் குரியன் பிறந்த நாள் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X