செய்தி செய்தி

தமிழ்நாடு

குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு கிடைக்காமல் அவதி: மாநகராட்சி கமிஷனரிடம் பிளம்பர்கள் முறையீடு

Added : நவ 25, 2021
Share
Advertisement
கோவை: கோவை மாநகராட்சி இணைய தளத்துடன், tnurbanepay.tn.gov.in என்ற இணையதளத்தை ஒருங்கிணைக்கும் பணி இன்னும் முழுமையாக முடிக்காததால், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு பெற முடியாத சூழல் நிலவுகிறது. இதற்கு தீர்வு காண, மாநகராட்சி கமிஷனருக்கு பிளம்பர்கள் சங்கத்தினர் கடிதம் எழுதியிருக்கின்றனர்.தமிழகத்தில், மற்ற மாநகராட்சிகளில், tnurbanepay.tn.gov.in என்ற இணைய தளம் வாயிலாக சொத்து வரி,

கோவை: கோவை மாநகராட்சி இணைய தளத்துடன், tnurbanepay.tn.gov.in என்ற இணையதளத்தை ஒருங்கிணைக்கும் பணி இன்னும் முழுமையாக முடிக்காததால், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு பெற முடியாத சூழல் நிலவுகிறது. இதற்கு தீர்வு காண, மாநகராட்சி கமிஷனருக்கு பிளம்பர்கள் சங்கத்தினர் கடிதம் எழுதியிருக்கின்றனர்.தமிழகத்தில், மற்ற மாநகராட்சிகளில், tnurbanepay.tn.gov.in என்ற இணைய தளம் வாயிலாக சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்தப்படுகிறது. கட்டட வரைபட அனுமதி, குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு பெற விண்ணப்பிக்கப்படுகிறது.இணைப்பு பெற சிக்கல்கோவை மாநகராட்சியில் புனே சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்டது. மற்ற மாநகராட்சியை போல், ஒருங்கிணைந்த இணைய தளம் பயன்படுத்த, கமிஷனர் ராஜகோபால் அறிவுறுத்தினார்.அதன்படி, மாநகராட்சி இணைய தளத்துடன், tnurbanepay.tn.gov.in என்ற இணைய தளம் ஒருங்கிணைக்கும் பணி, கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.அதனால், சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதற்கு முதலில் தீர்வு காணப்பட்டது. அதன்பின், குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இப்போது, அதற்கு விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி உயரதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், மண்டல அளவில் விசாரிக்கும்போது, 'டிபாசிட்' தொகை வசூலிக்கின்றனர்; இணைப்பு கிடைப்பதில்லை. அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போர் குடிநீர் இணைப்பு பெற விண்ணப்பிக்க முடியாத நிலை காணப்படுகிறது.இதற்கு தீர்வு காண, கோயம்புத்துார் மாநகராட்சியின் உரிமம் பெற்ற பிளம்பர்கள் சங்கத்தினர், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபாலை நேரில் சந்தித்து முறையிட்டனர்.மனுவில் கூறியிருப்பதாவது:புதிதாக குடிநீர் இணைப்புக்கான உத்தரவில், கட்டட உரிமையாளர் மற்றும் பிளம்பர் பெயர் வருவதில்லை. அரசு திட்டத்தில் மானியம் பெற்று வீடு கட்டும் பயனாளிகளுக்கு இணைப்பு கொடுக்க, கம்ப்யூட்டரில் பதிவு வருவதில்லை.பாதாள சாக்கடை இணைப்பு பெறுவதற்கு, கட்டணம் செலுத்த பதிவு வருவதில்லை. ஆறு மாதமாக பணிகள் தேங்கியுள்ளன; மாநகராட்சிக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. கிழக்கு மண்டலத்தில், பாதாள சாக்கடை இணைப்புக்கு விண்ணப்பம் பெறுவதில்லை.அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, குடிநீர் இணைப்பு விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த முடியாத சிறிய வீடுகளுக்கு விலக்களிக்க வேண்டும்.புதிதாக வரிவிதிப்பு செய்தபின், கேட்பு அட்டை பெற்றதும் மாநகராட்சிக்குரிய வரியினம் செலுத்தச் செல்லும்போது, கம்ப்யூட்டரில் இன்னும் உங்களது பெயர் பதிவேற்றப்படவில்லை என கூறி, திருப்பி அனுப்புகின்றனர்.இவ்வாறு, பிளம்பர்கள் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X