'வலிப்பு நோயை மருந்துகளால் இப்போது குணப்படுத்த முடியும்!'

Added : நவ 25, 2021
Share
Advertisement
''வலிப்பு நோய் குறித்த தவறான புரிதல்களால், நவீன சிகிச்சைகள் இருப்பது பொதுமக்களுக்கு தெரியவில்லை; வலிப்பு நோய் குணப்படுத்தக்கூடிய ஒன்றுதான்,'' என்கிறார், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை (கே.எம்.சி.எச்.,) நரம்பியல் நோய் மற்றும் வலிப்பு நோய் சிகிச்சை நிபுணர் ராஜேஷ் சங்கர்.அவர் மேலும் கூறியதாவது:வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களை, மருந்துகளாலேயே குணப்படுத்த

''வலிப்பு நோய் குறித்த தவறான புரிதல்களால், நவீன சிகிச்சைகள் இருப்பது பொதுமக்களுக்கு தெரியவில்லை; வலிப்பு நோய் குணப்படுத்தக்கூடிய ஒன்றுதான்,'' என்கிறார், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை (கே.எம்.சி.எச்.,) நரம்பியல் நோய் மற்றும் வலிப்பு நோய் சிகிச்சை நிபுணர் ராஜேஷ் சங்கர்.அவர் மேலும் கூறியதாவது:வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களை, மருந்துகளாலேயே குணப்படுத்த முடியும். ஆனால், 30 சதவீதம் பேருக்கு அது இயலாது. அதை 'ட்ரக் ரெஸிஸ்டென்ட் எபிலெப்சி' என்பர். இவர்களின் வாழ்க்கை தரம் முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கும். மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத வலிப்பு நோயாளிகளுக்கும் தீர்வு உள்ளது.நோயின் தன்மையை கண்டறிய, பல பரிசோதனைகள் உள்ளன. இதில், வீடியோ இ.இ.ஜி., முக்கியமான ஒன்று. இந்த பரிசோதனையில், நோயாளிகள் மருத்துவமனையில், ஒருநாள் முதல் ஒரு வாரம் வரை அனுமதிக்கப்பட்டு, மூளையில் ஏற்படும் அதிர்வுகள், பதிவு செய்யப்படும்.வலிப்பு நோய் ஏற்படும்போது, மூளையின் எந்த பகுதியில் இருந்து, வலிப்பை ஏற்படுத்தும் அலை உருவாகிறது, என்பதை துல்லியமாக கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படும்.பிரத்யேக தொழில்நுட்பங்களை கொண்ட, 'எபிலெப்சி புரோட்டோகால் எம்.ஆர்.ஐ.,' வலிப்பு ஏற்பட காரணமான அலை ஏற்படும் மூளையின் உட்பகுதியை, ஆழமாக, துல்லியமாக பார்க்க உதவும்.வலிப்புக்கான காரணம் தெரிந்த பின், சிகிச்சை துவக்கப்படும். வலிப்பு நோயின் தன்மைக்கேற்ப, மருந்துகள் பரிந்துரைக்கப்படும். சில நோயாளிகளை மருந்துகள் மூலமே குணப்படுத்தி விட முடியும். வலிப்பு நோய் உள்ளவர்கள், சரியான மருந்துகளை உட்கொள்ளவில்லை என்றால், நோய் குணமடையாது.மேலும் விவரங்களுக்கு, 73393 33485 என்ற மொபைல்போன் எண்ணில், தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X