அரசியலமைப்பு சட்ட தினம் இன்று கொண்டாடுவோம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
இந்தியாவில் ஆண்டுதோறும் நவ., 26ம் தேதி அரசியலமைப்பு சட்ட தினம் அல்லது தேசிய சட்ட தினமாக அனுசரிக்கப்படுகிறது. 1949ம் ஆண்டில் இந்த நாளில், இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம், அரசியல் நிர்ணய சபையால் ஏற்கப்பட்டது.இந்த நாளை நினைவு கூரும் வகையில், அரசியலமைப்பு சட்ட தினமாக கொண்டாடப்படும் என்று 2015ல் மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. முன்னதாக இந்த நாள், தேசிய சட்ட தினமாக கொண்டாடப்பட்டு

இந்தியாவில் ஆண்டுதோறும் நவ., 26ம் தேதி அரசியலமைப்பு சட்ட தினம் அல்லது தேசிய சட்ட தினமாக அனுசரிக்கப்படுகிறது. 1949ம் ஆண்டில் இந்த நாளில், இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம், அரசியல் நிர்ணய சபையால் ஏற்கப்பட்டது.இந்த நாளை நினைவு கூரும் வகையில், அரசியலமைப்பு சட்ட தினமாக கொண்டாடப்படும் என்று 2015ல் மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. முன்னதாக இந்த நாள், தேசிய சட்ட தினமாக கொண்டாடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.பின்னணிஅரசியல் சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கரின் 125ம் ஆண்டு பிறந்தநாள் விழா, 2015ல் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிரதமர் மோடி தலைமையில் கமிட்டி அமைத்து, ஆண்டு முழுவதும் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.இதன் ஒரு பகுதியாக, மும்பையில் அம்பேத்கர் நினைவகம் அமைக்க அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, நவ.,26ம் தேதி ஆண்டுதோறும் அரசியலமைப்பு சட்ட தினமாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அந்த ஆண்டு முதல், நாடு முழுவதும் இந்த விழா நடத்தப்படுகிறது. அரசின் பல்வேறு துறைகளும் இந்த நாளை விமரிசையாக கொண்டாடி வருகின்றன.பள்ளிகளில், அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரையை மாணவர்கள் வாசிக்கும் நிகழ்ச்சிகள், வினாடி வினா, கட்டுரைப்போட்டிகளும் நடத்தப்படுகின்றன.கல்லுாரிகளில், மாதிரி பார்லிமென்ட் கூட்டங்களும் நடத்தப்படுகின்றன.பார்லி சிறப்பு கூட்டம்முதல் முதலாக 2015ம் ஆண்டு அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாடப்பட்டபோது, வெளியுறவு அமைச்சகம், வெளிநாடுகளில் இருக்கும் இந்திய துாதரகங்களில் இந்நிகழ்ச்சியை நடத்தவும் ஏற்பாடு செய்திருந்தது.அந்தந்த நாட்டு மொழிகளில், இந்திய அரசியல் சட்டத்தை மொழிபெயர்த்து கல்வி நிறுவனங்கள், நுாலகங்களுக்கு வினியோகிக்கவும் உத்தரவிட்டது. விளையாட்டுத்துறை சார்பில், 'சமதர்ம ஓட்டம்' என்ற நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. அரசியலமைப்பு சட்டத்துக்கும், அம்பேத்கருக்கும் மரியாதை செலுத்தும் வகையில், இந்திய பார்லிமென்டின் சிறப்பு கூட்டமும் நடத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X