தமிழ்நாடு

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் புதிய நடைமுறை: தாய்மார்கள் 'அப்பாடா'

Added : நவ 25, 2021
Share
Advertisement
கோவை: பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில், தாய்மார்களுக்கான வயது வரம்பு அதிகரித்து, வெளியிட்ட அரசாணையால், பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற கருத்து எழுந்துள்ளது.சமூக நலத்துறையின் கீழ், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில், ஒரு பெண் குழந்தை இருப்பின், ரூ.50 ஆயிரம்; இரு பெண் குழந்தைகள் இருந்தால், தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.குழந்தையின் 18 வயது

கோவை: பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில், தாய்மார்களுக்கான வயது வரம்பு அதிகரித்து, வெளியிட்ட அரசாணையால், பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற கருத்து எழுந்துள்ளது.சமூக நலத்துறையின் கீழ், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில், ஒரு பெண் குழந்தை இருப்பின், ரூ.50 ஆயிரம்; இரு பெண் குழந்தைகள் இருந்தால், தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.குழந்தையின் 18 வயது பூர்த்தியடைந்த பிறகு, இத்தொகையை பெற்று கொள்ளலாம். இரண்டாவது பெண் குழந்தைக்கு, மூன்று வயது பூர்த்தியடையவதற்குள் விண்ணப்பிப்பது அவசியம். ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருப்பதோடு, ஆண் வாரிசு இன்மை சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.தாய்மார்களுக்கு 35 வயதுக்குள் இருப்பது அவசியம். தாமதமாக திருமணமாகும் பெண்கள், பல ஆண்டுகள் குழந்தையின்றி இருப்பவர்கள், தகுதியிருந்தும் வயது வரம்பால், இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாத நிலை இருந்து வந்தது.இந்நிலையில், வயது வரம்பு அதிகரித்து வெளியிடப்பட்ட அரசாணையால், பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற கருத்து எழுந்துள்ளது.மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தங்கமணி கூறுகையில், ''பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்து, தற்போது முதிர்வுத்தொகை பெற தகுதியுள்ளோர், அசல் வைப்பு நிதி பத்திரம், பள்ளிக்கல்வி முடித்ததற்கான சான்றிதழ், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை, கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் செயல்படும் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு, நேரில் கொண்டு வந்து சமர்பிக்கலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X