சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

100 புத்தகங்களை 8 நிமிட 'வீடியோ'வாக மாற்றுகிறேன்!

Added : நவ 25, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
இளைஞர்களுக்கு நேர்மறை சிந்தனை வளர்க்க, புதுமையான முறையில், 'வீடியோ' தயாரிப்பது பற்றி கூறும், சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்த விமல் தியாகராஜன்: வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்தியா என்றாலே இளக்காரமாக பேசுவதை கண்டேன். சென்னை திரும்பியவுடன் நண்பர்களின் உதவியுடன், 'பி.பாசிட்டிவ் தமிழ்' என்ற வலைப்பக்கத்தை துவங்கினேன். இளைஞர்களின் லட்சிய கனவையும், நேர்மறை சிந்தனைகளையும்
சொல்கிறார்கள்

இளைஞர்களுக்கு நேர்மறை சிந்தனை வளர்க்க, புதுமையான முறையில், 'வீடியோ' தயாரிப்பது பற்றி கூறும், சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்த விமல் தியாகராஜன்: வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்தியா என்றாலே இளக்காரமாக பேசுவதை கண்டேன். சென்னை திரும்பியவுடன் நண்பர்களின் உதவியுடன், 'பி.பாசிட்டிவ் தமிழ்' என்ற வலைப்பக்கத்தை துவங்கினேன். இளைஞர்களின் லட்சிய கனவையும், நேர்மறை சிந்தனைகளையும் ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பல கட்டுரைகளை பதிவு செய்தேன்; பல துறை சாதனையாளர்களை பேட்டி எடுத்து, அந்த வலைப்பக்கத்தில் பதிவிட்டேன்.மேலும், 'பி.பாசிட்டிவ்' என்ற பெயரில் பயிற்சி அகாடமி ஒன்றை துவக்கி, ஆளுமை பயிற்சி, தகுதி மேம்பாடு, மொழி ஆளுமை, மொழி பயிற்சி என பல பயிற்சிகளை தொடர்ந்து மாணவ ---- மாணவியருக்கு- அளித்து வருகிறேன். இப்பயிற்சியின் ஒரு பிரிவு தான் வாசிப்பை மேம்படுத்த செய்வது. இளைய தலைமுறையிடம் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தி, அதன் மூலம், நுாறு தலைசிறந்த ஆளுமைகளை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டேன்.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தொழிலதிபர், சமூக சேவகர், பிரபல நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், பேச்சாளர், கல்வியாளர் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்களை உருவாக்கும் நோக்கில் தான், '100 நாள் 100 புத்தகம்' பற்றிய திட்டம் உருவானது.அதற்கு ஒரு எளிய வழி, நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்று நினைத்து, நுாறு ஆங்கில புத்தகங்களை படித்து, அதில் உள்ள முக்கிய கருத்துகளை 8 நிமிட வீடியோவாக்கி, 100 காணொளிகளை, 'யுடியுப்' சமூக வலைதளத்தில் பதிவேற்றினேன்.எட்டு நிமிட வீடியோவிற்காக, 19 மணி நேரம் வேலை செய்கிறேன். புத்தகத்தை முழுமையாக படித்து அதிலுள்ள விஷயங்களை எடுத்து எழுதி, அதை எப்படி சொல்வது என்று தயார் செய்து, வீடியோவாக பதிவு செய்து, 'எடிட்' செய்து வெளியிடுகிறேன்.சிரமமான வேலை தான். ஆனால், இளைஞர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த கல்வி தான் சிறந்த ஆயுதம். தொழில்நுட்பம், அறிவியல், உற்பத்தி, உயிரியல், விளையாட்டு, கலாசாரப் பெருமை, சுற்றுலா என பல விஷயங்களை உள்ளடக்கிய இந்த வீடியோ, இளைஞர்களின் இலக்கை எட்ட உதவும்.இதற்காக பல புத்தகங்களை படிக்கும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தலைமை பண்பை ஏற்க வேண்டுமானால், அதிகமான புத்தகங்களை வாசிக்க வேண்டும். அப்போது தான் அறிவு விசாலமாகும். அதற்கு பெரும் துணையாக இருப்பது புத்தகங்களே.வாசித்தல் என்பது நம் உயிர்மூச்சு போன்றது. அதை பழகிக் கொள்ளுதல் வழக்கமாக்கி கொள்ளுதல் என்பதை விட, சுவாசித்தல் போன்று நம் வாழ்வில் இன்றியமையாததாக ஆக்கப்பட வேண்டும்!

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
26-நவ-202113:31:12 IST Report Abuse
Sampath Kumar முயற்சி வாழ்த்துக்கள் அனாலும் இங்கு உள்ள கல்வி யாளர்கள் அனுமதி தருவார்களா ??/ சந்தேகம்
Rate this:
Cancel
Balu - Bangalore,இந்தியா
26-நவ-202108:10:22 IST Report Abuse
Balu please share youtube link or blog link. Thanks
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X