பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரியை பாதுகாக்க முழு முயற்சி: புதிய கலெக்டர் உறுதி

Updated : நவ 26, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
ஊட்டி: நீலகிரியின் 114வது கலெக்டராக பதவியேற்று கொண்ட அம்ரித், வன விலங்கு, சுற்றுலா பயணியர் வாழ தகுதியான இடமாகவும், மாவட்டத்தை பாதுகாக்கவும் முயற்சி செய்வேன் என தெரிவித்துள்ளார்.நீலகிரி மாவட்ட கலெக்டராக இருந்த, இன்னசென்ட் திவ்யா, மிகவும் சிறப்பாக செயல்பட்டார். அந்த மாவட்டத்தில், சீகூர் பள்ளத்தாக்கு, சோலுார், மசினகுடி உள்ளிட்ட சில பகுதிகளில், யானை வழித்தடத்தில்,

ஊட்டி: நீலகிரியின் 114வது கலெக்டராக பதவியேற்று கொண்ட அம்ரித், வன விலங்கு, சுற்றுலா பயணியர் வாழ தகுதியான இடமாகவும், மாவட்டத்தை பாதுகாக்கவும் முயற்சி செய்வேன் என தெரிவித்துள்ளார்.latest tamil news
நீலகிரி மாவட்ட கலெக்டராக இருந்த, இன்னசென்ட் திவ்யா, மிகவும் சிறப்பாக செயல்பட்டார். அந்த மாவட்டத்தில், சீகூர் பள்ளத்தாக்கு, சோலுார், மசினகுடி உள்ளிட்ட சில பகுதிகளில், யானை வழித்தடத்தில், சட்டத்திற்கு புறம்பாக தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் கட்டப்பட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமிக்கதடை விதித்தது. அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, 2019ல் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, ஹோட்டல் உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில், மாவட்ட கலெக்டர் விரைவாக செயல்பட வேண்டும்.இந்த வழக்கு தொடர்பாக, அவர் பல்வேறு பணிகளை செய்து வருவதால், மறு உத்தரவு வரும்வரை, அவரை வேறு எங்கும் மாற்றக்கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.


latest tamil news
சமீபத்தில், நிர்வாக ரீதியில் அவசர மாற்றங்கள் செய்ய வேண்டும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில், இடைக்கால மனு தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து, அவரை இடமாற்றம் செய்ய, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. சில தினங்களுக்கு முன், இன்னசென்ட் திவ்யா விடுப்பில் சென்றார். மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்திபிரியதர்ஷினி, கலெக்டர் பணியை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். நகராட்சி நிர்வாகத்துறை இணை கமிஷனராக பணியாற்றி வந்த அம்ரித், நீலகிரி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை, தலைமை செயலர் இறையன்பு பிறப்பித்தார்.

இந்நிலையில், நீலகிரியில், 114 வது கலெக்டராக அம்ரித் இன்று பொறுப்பேற்றார்.

பின், நிருபர்களிடம் கூறுகையில், நீலகிரி மிகவும் முக்கியமான வனஉயிரின மண்டலத்தில் இடம்பெற்றுள்ளதால் இங்குள்ள மக்கள், சுற்றுலாப்பயணிகள் மற்றும் வன விலங்குகள் வாழத் தகுதியான இடமாக திகழ வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் செய்யும். இம் மாவட்ட மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகள், அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து செல்வதில் முழுமையாக கவனம் செலுத்தப்படும். யானை வழித்தட, விதிமீறிய கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை தீர்ப்பது குறித்து உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலின்படியும், உச்சநீதி மன்ற நியமித்துள்ள குழு மற்றும் அரசின் வழிகாட்டுதலின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அம்ரித் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vigneshh - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
26-நவ-202117:07:13 IST Report Abuse
vigneshh no tree will be alive before after May 2026
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
26-நவ-202116:45:06 IST Report Abuse
DVRR அப்போ ட்ரான்ஸபெருக்கு ரெடியாக இரு
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
26-நவ-202116:35:28 IST Report Abuse
DVRR சேர்ந்த இடம் மாறும் நீர் அதை போலத்தான் இறையன்பும்
Rate this:
கிச்சாமி - மங்கலம்,இந்தியா
26-நவ-202118:28:47 IST Report Abuse
கிச்சாமிபூடகமா சொல்றதா நெனைச்சிக்கிட்டு உளறக்கூடாது. நல்லவர்களை பற்றி அவதூறு சொல்வது தவறு. ஆனால், இந்தக் கேவலமான பழக்கம் ஆண்டாண்டுகாலமாக இங்கு வழக்கமான ஒன்றாகவே ஆகிவிட்டது சாபம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X