செய்தி செய்தி

தமிழ்நாடு

'கை தொழில் கற்பதால் வாழ்வு மேம்படும்': கலை பொருள் பயிற்சி முகாமில் அறிவுரை

Added : நவ 25, 2021
Share
Advertisement
கூடலுார்: கூடலுார் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி மையத்தில், சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில், மூங்கிலில் கலை பொருட்கள் தயாரிப்பது குறித்து, இரண்டு மாத பயிற்சி முகாம் துவங்கியது. மையத்தின் முதல்வர் ஷாஜி வரவேற்றார்.கூடலுார் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் துவக்கி வைத்து பேசுகையில், ''இளைஞர்கள் கை தொழிலை கற்று கொள்வதன் வாயிலாக வேலைவாய்ப்பு மற்றும்



கூடலுார்: கூடலுார் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி மையத்தில், சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில், மூங்கிலில் கலை பொருட்கள் தயாரிப்பது குறித்து, இரண்டு மாத பயிற்சி முகாம் துவங்கியது. மையத்தின் முதல்வர் ஷாஜி வரவேற்றார்.கூடலுார் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் துவக்கி வைத்து பேசுகையில், ''இளைஞர்கள் கை தொழிலை கற்று கொள்வதன் வாயிலாக வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் தங்களை உயர்த்தி கொள்ள முடியும். மத்திய அரசு இளைஞர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், அதற்கான பயிற்சி அளித்து வருகிறது. பயிற்சி பெற்றவர்கள் மூங்கில்களில் உற்பத்தி செய்யும், கலை பொருட்களை விற்பனை செய்து வருவாய் ஈட்ட வனத்துறை சார்பில் உதவிகள் செய்யப்படும்,'' என்றார்.கல்வி மையத்தின் கள அலுவலர் குமாரவேல், கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் ஆகியோர் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X