செய்தி செய்தி

தமிழ்நாடு

சரக்கு இறக்க நேரம் ஒதுக்குங்க! அத்துமீறலுக்கு கடிவாளம் தேவை

Added : நவ 25, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில் போக்குவரத்தை மறித்து, நடு ரோட்டில் நிறுத்தி கடைகளுக்கு சரக்கு இறக்கும் லாரிகளால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.பொள்ளாச்சியில், நெரிசலும், சாலை விதிமீறல்களுக்கும் அதிகரித்துள்ளது. இதில், கடைகளுக்கு சரக்கு கொண்டு வந்து இறக்கும் லாரிகளால், அடிக்கடி போக்குவரத்து பாதிக்கிறது.போக்குவரத்து நெரிசல் மிக்க ரோடுகளில், போக்குவரத்து அதிகமுள்ள

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில் போக்குவரத்தை மறித்து, நடு ரோட்டில் நிறுத்தி கடைகளுக்கு சரக்கு இறக்கும் லாரிகளால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.பொள்ளாச்சியில், நெரிசலும், சாலை விதிமீறல்களுக்கும் அதிகரித்துள்ளது. இதில், கடைகளுக்கு சரக்கு கொண்டு வந்து இறக்கும் லாரிகளால், அடிக்கடி போக்குவரத்து பாதிக்கிறது.போக்குவரத்து நெரிசல் மிக்க ரோடுகளில், போக்குவரத்து அதிகமுள்ள நேரங்களில், சரக்கு லாரிகள் நடு ரோட்டில் நிறுத்தி, கடைகளுக்கு சரக்கு இறக்குவது தொடர் கதையாக உள்ளது. இதனால், மக்கள் தினமும் அவதிக்குள்ளாகின்றனர்.வியாபாரிகளின் தயவு தேவைப்படுவதாலோ என்னவோ, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நகராட்சி, போலீஸ் அதிகாரிகள், இந்த விதிமீறலை தடுக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்வதில்லை.மற்ற நகரங்களில், இது போன்ற சரக்கு வாகனங்கள், பகலில் நகருக்குள் நுழையவே தடை உள்ளது. இரவு அல்லது அதிகாலை நேரத்தில், போக்குவரத்துக்கு இடையூறு இன்றி சரக்கு இறக்கிக்கொள்ள வேண்டும் என, நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.இந்த விதிமுறைகள் எதுவும், பொள்ளாச்சிக்கு வரும் சரக்கு வாகனங்களுக்கு பொருந்தாது என்பது போன்று நடந்து கொள்கின்றனர். இதனால், மக்களின் அவதி குறித்தோ, போக்குவரத்து பிரச்னை குறித்தோ, அதிகாரிகளுக்கும் அக்கறை இல்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X