அவரு மனசு... இவங்களுக்கு இல்லையே! ஓவியத்தால் அழகானது அலங்கோல சுவர்| Dinamalar

செய்தி செய்தி

தமிழ்நாடு

அவரு மனசு... இவங்களுக்கு இல்லையே! ஓவியத்தால் அழகானது அலங்கோல சுவர்

Added : நவ 25, 2021
Share
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், போஸ்டர்களால் அலங்கோலமாக காட்சியளிக்கும் சுவரை, நாடோடி ஓவிய கலைஞன், அழகான ஓவியத்தால், காண்போரை திரும்பி பார்க்க வைத்துள்ளார். அவருக்கு இருக்கும் மனசு, நம்ம ஊருக்காரங்களுக்கு இல்லையே!பொள்ளாச்சி நகரம், தென்னை மரங்களும், பசுமையும் நிறைந்த நகரமாக அழகாக காட்சியளிக்கிறது. ஆனால், நகரப்பகுதியில், பிளக்ஸ் மற்றும் போஸ்டர்களால் அலங்கோலமாக
அவரு மனசு... இவங்களுக்கு இல்லையே!  ஓவியத்தால் அழகானது அலங்கோல சுவர்



பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், போஸ்டர்களால் அலங்கோலமாக காட்சியளிக்கும் சுவரை, நாடோடி ஓவிய கலைஞன், அழகான ஓவியத்தால், காண்போரை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
அவருக்கு இருக்கும் மனசு, நம்ம ஊருக்காரங்களுக்கு இல்லையே!பொள்ளாச்சி நகரம், தென்னை மரங்களும், பசுமையும் நிறைந்த நகரமாக அழகாக காட்சியளிக்கிறது. ஆனால், நகரப்பகுதியில், பிளக்ஸ் மற்றும் போஸ்டர்களால் அலங்கோலமாக காட்சியளிக்கின்றன.போஸ்டகள் ஒட்ட விதிமுறைகளை பின்பற்ற அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். சாலை தடுப்புகள், அரசு கட்டடங்கள், பழைய மற்றும் கூடுதல் பஸ் ஸ்டாப்கள், பேரிகார்டு போன்றவற்றில், போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், இந்த எச்சரிக்கை அறிவிப்பை யாரும் பின்பற்றுவதில்லை. கோவை ரோடு, பாலக்காடு ரோட்டில் உள்ள சாலை தடுப்புகள் மற்றும் கோட்டூர் ரோடு மேம்பால சுவர், பஸ் ஸ்டாண்ட், அரசு அலுவலகங்களின் சுற்றுச்சுவர் என, காணும் இடமெல்லாம் அரசியல் கட்சியினர் போஸ்டர்கள், சினிமா படம் மற்றும் விளம்பர போஸ்டர்களால் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என, தன்னார்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.சுவரில் ஓவியம்பொள்ளாச்சி தாலுகா அலுவலக ரோடு, பாலகோபாலபுரம் வீதி சந்திப்பு பகுதியில் உள்ள சுவற்றில், நாடோடி கலைஞர் ஒருவர் கிடைத்த பொருட்களை கொண்டு அழகான ஒரு ஓவியத்தை வரைந்துள்ளார். பசுமையான மரங்கள், நீரோடை, வழித்தடம் என பார்ப்பவர்களை ஈர்க்கும் வகையில் ஓவியம் வரைந்துள்ளார்.அங்கிருந்தவர்கள், அரசியல்வாதிகளின் செயலை நொந்து கொண்டு, ஓவிய கலைஞனின் செயலை பாராட்டினர். திருவறையாறு பகுதியை சேர்ந்த சதானந்தம் என்றும், ஓவியத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டதால், செல்லும் இடங்களில் எல்லாம், தாவர இலை, தழைகளை கொண்டு சுவர் ஓவியம் வரைவதாக, அவர் தெரிவித்துள்ளார்.ஓவியத்தை பார்த்து, வேறு இடத்தில் உள்ள சுவரில் வரைந்து கொடுக்க வேண்டுமென, யாராவது அழைத்தால் அங்கு சென்று வரைந்து கொடுக்கிறேன். அவர்கள் கொடுக்கும் பணத்தை பெற்றுக்கொள்வேன் என்று, எதார்த்தமாக தெரிவித்துள்ளார்.மனசு வையுங்க!சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பொள்ளாச்சி நகரில் அலங்கோலமாக காட்சியளிக்கும் சுவர்களை அழகுப்படுத்த முடியும், என நிரூபிக்கும் வகையில் இந்த கலைஞனின் செயலை பார்க்க முடிகிறது. சுவற்றை அழகுப்படுத்திய இந்த கலைஞனின் எண்ணம், அரசியல்வாதிகளுக்கு ஏற்பட வேண்டும்.இதுபோன்ற கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கவும், நகரின் அழகை மேம்படுத்தவும் அரசு சுவர்கள், பள்ளி சுவர்களில் ஓவியங்களை வரைந்து, நகரை அழகுப்படுத்தலாம்.அவர்களுக்கும் ஒரு வாய்ப்பாக அமையும். கலையை ஊக்குவிப்பதோடு நகரின் சுவர்களை துாய்மையாக வைத்திருக்க முடியும். அதிகாரிகள் நினைத்தால் மாற்றம் வரும். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X