செய்தி செய்தி

தமிழ்நாடு

வேளாண் கருவிகளை மானியத்தில் கொடுங்க!

Added : நவ 25, 2021
Share
Advertisement
உடுமலை: விளைநிலங்களுக்கு மருந்து தெளிக்கும், 'ட்ரோன்' இயந்திரத்தை, உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு மானியத்தில் வழங்க, உழவர் உற்பத்தியாளர் பொதுக்குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில், பஞ்சலிங்க அருவி கூட்டு பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின், மூன்றாம் ஆண்டு, பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்துக்கு,

உடுமலை: விளைநிலங்களுக்கு மருந்து தெளிக்கும், 'ட்ரோன்' இயந்திரத்தை, உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு மானியத்தில் வழங்க, உழவர் உற்பத்தியாளர் பொதுக்குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில், பஞ்சலிங்க அருவி கூட்டு பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின், மூன்றாம் ஆண்டு, பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்துக்கு, நிறுவனத்தின் தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் மனோகரன், வேளாண் துணை இயக்குனர் மகாதேவன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பிரேமாவதி உட்பட வேளாண் சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று, மானிய திட்டங்கள் குறித்து பேசினர்.தமிழகத்தில், சிறு தானியங்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், விதை உட்பட இடுபொருட்களை மானியத்தில் வழங்கும் சிறப்பு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும்.தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக, மருந்து தெளிக்க, ட்ரோன் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது; இந்த இயந்திரத்தை, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு மானியத்தில் வழங்க வேண்டும்.தமிழக அரசின், கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தில், சில கிராமங்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளன; இதில், அனைத்து கிராமங்களையும் தேர்வு செய்து, திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.விவசாயிகள் தயாரிக்கும் மதிப்பு கூட்டு பொருட்களுக்கு சந்தை வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாகி கீர்த்திகா நன்றி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X