பா.ஜ.,வை எதிர்க்க காங்.,குக்கு திறன் இல்லை! திரிணமுல் காங்கிரஸ் சரமாரி தாக்கு

Updated : நவ 27, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (14) | |
Advertisement
கோல்கட்டா :'பா.ஜ.,வை எதிர்த்து அரசியல் களத்தில் போராடத் தேவையான தகுதி மற்றும் திறன் காங்கிரசிடம் இல்லை. எனவே தான் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் வெளியேறி திரிணமுல் காங்கிரசில் இணைகின்றனர். இதற்காக திரிணமுல் காங்கிரசை குற்றம் சொல்லக் கூடாது' என, அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'ஜகோ பங்களா' தலையங்கம் எழுதி உள்ளது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி
பா.ஜ.,  எதிர்க்க காங்.,திறன் இல்லை! திரிணமுல் காங்.,சரமாரி தாக்கு

கோல்கட்டா :'பா.ஜ.,வை எதிர்த்து அரசியல் களத்தில் போராடத் தேவையான தகுதி மற்றும் திறன் காங்கிரசிடம் இல்லை. எனவே தான் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் வெளியேறி திரிணமுல் காங்கிரசில் இணைகின்றனர்.

இதற்காக திரிணமுல் காங்கிரசை குற்றம் சொல்லக் கூடாது' என, அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'ஜகோ பங்களா' தலையங்கம் எழுதி உள்ளது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த மாநில சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது.இதையடுத்து ஆளும் திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த பல மூத்த தலைவர்கள் பா.ஜ.,வில்இணைந்தனர்.உறவில் விரிசல்சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திரிணமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து பா.ஜ.,வில் இணைந்த பல மூத்த தலைவர்கள் மீண்டும் திரிணமுல் காங்கிரசுக்கு திரும்பத் துவங்கினர்.சட்டசபை தேர்தல் வெற்றி தந்த உற்சாகத்தில் வரும் 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்த, எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் மம்தா பானர்ஜி ஈடுபட்டார். இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா உட்பட பல்வேறு எதிர்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். மம்தாவுக்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் தலைமை தயங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2019 லோக்சபா தேர்தலில் உ.பி.,யின் அமேதி தொகுதியில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் தோல்வி அடைந்ததை மம்தா பானர்ஜி சமீபத்தில் கடுமையாக விமர்சித்தார்.

இதையடுத்து காங்கிரஸ் தலைமையுடனான மம்தாவின் உறவில் விரிசல் ஏற்படத் துவங்கியது.இதையடுத்து பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரசுக்கு மாற்றாக திரிணமுல் காங்கிரசை முன்னிலைப்படுத்த மம்தா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அசாம், கோவா, பீஹார், ஹரியானா, உ.பி., மாநிலங்களில் நேரடியாக கால் பதிக்கும் முயற்சியில் திரிணமுல் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.'பா.ஜ.,வுக்கு எதிரான போரில் என்னுடன் இணைந்து பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் திரிணமுல் காங்கிரசில் இணையலாம்' என, மம்தா பானர்ஜி நேற்று முன் தினம் டில்லியில் பகிரங்க அழைப்பு விடுத்தார்.


காங்கிரசுக்கு எதிராக திரிணமுல் காங்கிரஸ் சதி திட்டம் தீட்டி வருவதாக பல்வேறு மூத்த காங்கிரஸ் தலைவர்களும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.இது குறித்து திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான, 'ஜகோ பங்களா'வில் வெளியான தலையங்கம்:பா.ஜ.,வுக்கு எதிராக போராடுவதில் காங்கிரஸ் தோல்வி அடைந்துவிட்டது. அதே நேரத்தில் பா.ஜ.,வை வீழ்த்துவது எப்படி என்பதை மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி செய்து காட்டினார். எனவே தான், மற்ற மாநிலங்களிலும் கட்சியை துவங்க திரிணமுல் காங்கிரசுக்கு அழைப்பு வருகின்றன. பல்வேறு கட்சி தலைவர்களும் திரிணமுல் காங்கிரசில் இணைய விரும்புகின்றனர்.


பயன் இல்லைமம்தாவை ஒரு மாற்றாக அனைவரும் பார்க்கின்றனர். அரசியல் களத்தில் பா.ஜ.,வை எதிர்த்து போராட தேவையான தகுதி மற்றும் திறனை காங்கிரஸ் இழந்துவிட்டது. தங்கள் கட்சி தலைவர்கள் வெளியேறுவதற்கு திரிணமுல் காங்கிரஸ் மீது குற்றம் சுமத்தி பயன் இல்லை.
குளிரூட்டப்பட்ட அறை மற்றும் சமூக வலைதளங்களை தாண்டி வெளியே வர காங்கிரஸ் தலைவர்கள் தயாராக இல்லை. பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை திரட்டும் முயற்சியில் அவர்கள் தோல்வி அடைந்து விட்டனர். கோவாவிலும், திரிபுராவிலும் திரிணமுல் காங்கிரஸ் தெருவில் இறங்கி போராடி வருகிறது.மற்ற மாநிலங்களிலும் கால் பதித்து பலத்தை நிரூபிக்கும் முயற்சியில் திரிணமுல் காங்கிரஸ் தொடர்ந்து ஈடுபடும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


12 காங்., - எம்.எல்.ஏ.,க்கள் திரிணமுல்லில் ஐக்கியம்வட கிழக்கு மாநிலமான மேகாலயாவில் முதல்வர் கான்ராட் சங்மா தலைமையில் தேசிய மக்கள் கட்சி ஆட்சி நடக்கிறது. எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரசுக்கு 17 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
இதில் சட்டசபை எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான முகுல் சங்மா உட்பட 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அக்கட்சியில் இருந்து விலகி திரிணமுல் காங்கிரசில் நேற்று இணைந்தனர்.இது குறித்து முகுல் சங்மா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:மேகாலயா காங்., தலைவராக வின்சென்ட் பலா நியமிக்கப்பட்டதில் இருந்து பிரச்னை துவங்கியது. 'வலுவான எதிர்க்கட்சியாக நாம் செயல்பட வேண்டுமானால் அவரை மாற்ற வேண்டும்' என, டில்லி தலைமையிடம் பலமுறை நேரில் முறையிட்டும் பலன் இல்லை.இந்த நேரத்தில் தான் அரசியல் வியூக வல்லுனர் பிரசாந்த கிஷோரை டில்லியில் சந்தித்தேன். மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்பதில் எங்கள் இருவரது எண்ணமும் ஒத்துப்போனது.மாநில மக்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றும் நோக்கத்தில், அதிகபட்ச பொறுப்புணர்வுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


திட்டமிட்ட சதிமேகாலயா மட்டுமல்லாமல் வடகிழக்கு மாநிலங்கள் முழுதும் காங்கிரசை உடைக்க சதி நடக்கிறது. 12 எம்.எல்.ஏ.,க்கள் திரிணமுல் காங்கிரசில் இணைந்தாலும் அவர்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தான். உங்களுக்கு துணிவிருந்தால் அவர்களை ராஜினாமா செய்ய வைத்து, திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர்களாக நிறுத்தி வெற்றி பெற செய்யுங்கள். காங்கிரசை உடைத்து பா.ஜ.,வுக்கு உதவுவதே மம்தாவின் நோக்கம்.ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மூத்த தலைவர், காங்.,

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagercoil Suresh - India,இந்தியா
26-நவ-202122:42:33 IST Report Abuse
Nagercoil Suresh பாஜாகா பிரசந்தகிஷோர் மூலமாக மம்தாவை வைத்து காங்கிரஸ் கட்சியை வலுவிழக்க செய்கிறது...மம்தா இதையே தான் பல ஆண்டுகளாக செய்துவருகிறார்...
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
26-நவ-202121:42:06 IST Report Abuse
sankaseshan அசங்காபிடாரியின் ஆட்டம் விரைவில் அடங்கிவிடும்
Rate this:
Cancel
Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
26-நவ-202115:56:50 IST Report Abuse
Sathyanarayanan Bhimarao தீதியுடன் அரவிந்த் கேஜ்ரிவால் இணைந்தால் கண்டிப்பாக சில மானிலங்களில் கணிசமான இடங்களைப் பிடிக்கலாம். தமிழ் நாட்டின் தி.மு.க சேர்ந்தால் பலமான எதிர்க் காட்சியாகும்.
Rate this:
sankar - Nellai,இந்தியா
26-நவ-202117:29:51 IST Report Abuse
sankarவாய்ப்பில்லை ராசா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X