செய்தி செய்தி

தமிழ்நாடு

கல்வி உதவித்தொகை  விண்ணப்பிக்க அறிவுரை

Added : நவ 25, 2021
Share
Advertisement
கோவை: மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க பல்கலை மானியக் குழு (யூ.ஜி.சி.,) அறிவுறுத்தியுள்ளது.முதுகலை பயிலும் பெண் குழந்தை கள், பல்கலை தரவரிசை மாணவர்கள், தொழில்முறை படிப்புகள் படிக்கும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்காக இந்திராகாந்தி முதுகலை கல்வி உதவித் தொகை வழங்கிவருகிறது.இதற்காக, தேசியக்கல்வி உதவித்தொகை இணையதளம் கடந்த, ஆக., 18 முதல் செயல்பட்டு

கோவை: மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க பல்கலை மானியக் குழு (யூ.ஜி.சி.,) அறிவுறுத்தியுள்ளது.முதுகலை பயிலும் பெண் குழந்தை கள், பல்கலை தரவரிசை மாணவர்கள், தொழில்முறை படிப்புகள் படிக்கும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்காக இந்திராகாந்தி முதுகலை கல்வி உதவித் தொகை வழங்கிவருகிறது.இதற்காக, தேசியக்கல்வி உதவித்தொகை இணையதளம் கடந்த, ஆக., 18 முதல் செயல்பட்டு வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும், தகுதியான மாணவர்கள் https://scholarships.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.இந்த இணையதளத்தில் புதிதாகவும், கல்வி உதவித்தொகை பெற்றவர்கள் புதுப்பிக்கவும் முடியும். ஆன்லைனில் வரும், 30 க்குள் விண்ணப்பிக்க, வேண்டும்.விண்ணப்பங்களை கல்வி நிறுவனங்கள் சரிபார்க்க மற்றும் மாணவர்கள் தவறுகளை திருத்த வரும், டிச., 15 இறுதி நாளாகும். இவ்வாறு, பல்கலை மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X