செய்தி செய்தி

தமிழ்நாடு

கோவையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
சூலுார்: மகளிர் திட்டம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், கோவையில், நாளை (27ம் தேதி) வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.தமிழ்நாடு ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், வேலைவாய்ப்பு முகாம், கோவை அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரியில் நாளை நடக்கிறது.காலை, 8:00 முதல் மாலை, 4:00 மணி வரை நடக்கும் முகாமில், வேலைவாய்ப்புகளை வழங்கும் பல

சூலுார்: மகளிர் திட்டம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், கோவையில், நாளை (27ம் தேதி) வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.தமிழ்நாடு ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், வேலைவாய்ப்பு முகாம், கோவை அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரியில் நாளை நடக்கிறது.காலை, 8:00 முதல் மாலை, 4:00 மணி வரை நடக்கும் முகாமில், வேலைவாய்ப்புகளை வழங்கும் பல முன்னணி தொழில்நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. எட்டாம் வகுப்பு முதல் தொழில்நுட்பக் கல்வி, பட்டயப்படிப்பு, இளங்கலை மற்றும் முதுகலை படிப்பு முடித்து வேலைவாய்ப்பற்றவர்கள் பங்கேற்று பயன் அடையலாம்.நகர்புறம் மற்றும் ஊரக பகுதியில் படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், கல்வி சான்றிதழ் மற்றும் இதர தகுதி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் கலந்து கொள்ளலாம்.விபரங்களுக்கு, 0422-2301855 என்ற எண்ணில் மகளிர் திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X