மேட்டுப்பாளையம்: காரமடை விவேகானந்தபுரம் இந்திய வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையத்தில், தேனீ வளர்ப்பு குறித்த ஏழு நாள் பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.தேசிய தேனீ வளர்ப்பு வாரியம் மற்றும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி சார்பில், பயிற்சி நடக்கிறது. இந்திய வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மைய முதுநிலை விஞ்ஞானி குமாரவடிவேல் தலைமை வகித்தார்.கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரி செயலர் வாசுகி கூறுகையில், ''விவசாய உப தொழில்களில், தேனீ வளர்ப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. முருங்கை பூவில் இருந்து கிடைக்கும் தேன் அதிக மருத்துவ குணம் கொண்டது என்பதால், சந்தையில் அதிக வரவேற்பு உள்ளது. பெண்கள் உபரி வருமானத்திற்காக தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம். உரிய பயிற்சி பெற்றால், எளிதாக சாதிக்கலாம்,'' என்றார்.
முதல் நாள் பயிற்சியில் தேனீ வளர்ப்பில் தொழில் வாய்ப்பு, தேன் மருத்துவ குணங்கள், தேன் வளர்ப்பில் பெண்களுக்கான வாய்ப்புகள் குறித்து வல்லுனர்கள் விளக்கம் அளித்தனர்.தேனீ வளர்ப்பு குறித்த கையேடு வெளியிடப்பட்டது. விழாவில், கொங்குநாடு அறிவியல் கல்லுாரி தேனீ வளர்ப்பு துறைத் தலைவர் ராஜேஷ், பேராசிரியர் அப்துல் கபூர், அங்கக உற்பத்தியாளர் நிறுவன ஒருங்கிணைப்பாளர் ரங்கசாமி, அரங்கநாதர் உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் முத்துசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE