காட்டு யானையால் பயிர் நாசம்| Dinamalar

செய்தி செய்தி

தமிழ்நாடு

காட்டு யானையால் பயிர் நாசம்

Added : நவ 25, 2021
Share
பெ.நா.பாளையம்: துடியலுார் அருகே தாளியூர் வட்டாரத்தில் காட்டு யானைகள் தினமும் ஊருக்குள் நுழைந்து, பயிர் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இதை கண்டித்து, நாளை மறியல் செய்ய விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.கோவை புறநகர் வடக்கு பகுதியில், மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களில், காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.பன்னிமடை ஊராட்சிக்கு உட்பட்ட தாளியூரில் கடந்த, 10

பெ.நா.பாளையம்: துடியலுார் அருகே தாளியூர் வட்டாரத்தில் காட்டு யானைகள் தினமும் ஊருக்குள் நுழைந்து, பயிர் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இதை கண்டித்து, நாளை மறியல் செய்ய விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.கோவை புறநகர் வடக்கு பகுதியில், மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களில், காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.பன்னிமடை ஊராட்சிக்கு உட்பட்ட தாளியூரில் கடந்த, 10 நாட்களாக தினசரி இரவு, 10 யானைகள் வரை ஊருக்குள் புகுந்து, விவசாய நிலங்களில் உள்ள தென்னை, வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துகின்றன. வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தும், உரிய நடவடிக்கை இல்லை.தாளியூரை சேர்ந்த விவசாயி வெங்கடேஸ்வரன் கூறுகையில், ''திப்பனூர் மற்றும் தாளியூரில் உள்ள தோட்டங்களில் காட்டு யானைகள் தினசரி புகுந்து தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. மக்கள் குடியிருக்கும் பகுதியில், இரவு, 8:00 மணிக்கே காட்டு யானைகள் நுழைந்து விடுகின்றன. யானைகளை விரட்ட பட்டாசு வெடிக்கக் கூடாது என, வனத்துறையினர் தடை விதிக்கின்றனர். யானைகளின் வருகையை தடுக்க, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, விவசாயிகள் நாளை தாளியூர் பஸ் ஸ்டாண்டில் காலை, 10:00 மணிக்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X