நீர்நிலை சர்வே எண்களின் மோசடி உட்பிரிவுகள் ரத்து?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீர்நிலை 'சர்வே' எண்களின் மோசடி உட்பிரிவுகள் ரத்து?

Added : நவ 25, 2021 | கருத்துகள் (1)
Share
சென்னை:நீர்நிலை 'சர்வே' எண்களில் மோசடியாக ஏற்படுத்தப்பட்ட உட்பிரிவுகளை ரத்து செய்வது குறித்து, அதிகாரிகள் நிலையில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் 40 ஆயிரத்துக்கும், மேற்பட்ட ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ளன. இவை அந்தந்த பகுதி உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் ஆசியுடன் ஆக்கிரமிக்கப்பட்டு, மக்களுக்கு மனைகளாக விற்கப்பட்டுள்ளன.இந்த மனைகளை குறைந்த

சென்னை:நீர்நிலை 'சர்வே' எண்களில் மோசடியாக ஏற்படுத்தப்பட்ட உட்பிரிவுகளை ரத்து செய்வது குறித்து, அதிகாரிகள் நிலையில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 40 ஆயிரத்துக்கும், மேற்பட்ட ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ளன. இவை அந்தந்த பகுதி உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் ஆசியுடன் ஆக்கிரமிக்கப்பட்டு, மக்களுக்கு மனைகளாக விற்கப்பட்டுள்ளன.இந்த மனைகளை குறைந்த விலைக்கு வாங்கி குடியேறியவர்கள், தற்போது ஆக்கிரமிப்பாளர்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இது போன்று நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டதால் தான், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மழைக்காலத்தில் வெள்ளக்காடாக மாறுகின்றன.இந்நிலையில், நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள், கடைகள், உருவாக்கப்பட்ட மனைகள் விற்பனை பத்திரங்களை பதிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நீர் நிலை ஆர்வலர்கள் கூறியதாவது:நீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில், பதிவுத் துறை பிறப்பித்துள்ள தடை வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் பெரும்பாலான நீர்நிலைகளின் அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டு உள்ளன.

உதாரணமாக, ஒரு ஏரியின் சர்வே எண், 244 என்றால், அதில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்கு புதிதாக சர்வே எண் வழங்க முடியாது என்பதால், 244/1ஏ என்று மோசடியாக உட்பிரிவு ஏற்படுத்தப்பட்டு இருக்கும். நீர் நிலைகளுக்கான சர்வே எண்களில் உட்பிரிவுகள் இருக்க வாய்ப்பில்லை.எனவே, நீர்நிலைகளிபிரதான சர்வே எண்ணுடன் தொடர்புடைய உட்பிரிவுகள் மோசடியாக உருவாக்கப்பட்டவை.

இதை கருத்தில் வைத்து, நீர்நிலைகளின் பிரதான சர்வே எண்கள் அடிப்படையிலான உட்பிரிவுகளை ரத்து செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.இதற்கான நடவடிக்கை எடுக்க, வருவாய் துறை உயரதிகாரிகள் நிலையில் ஆலோசனை நடந்து வருகிறது. விரைவில், இதில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X