சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தக்காளி வாங்க கடன் கொடுங்க! வங்கி முன் ஆர்ப்பாட்டம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்: காய்கறி வியாபாரிகளுக்கு, கடன் வழங்கக் கோரி பொது தொழிலாளர் சங்கத்தினர், வங்கி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேட்டுப்பாளையம் தாலுகாவில், விவசாய கூலித் தொழிலாளர்களும், காய்கறி வியாபாரிகளும் அதிகளவில் உள்ளனர். இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலால் வேலையின்றி கூலி தொழிலாளர்களும், கடைகள் வைக்க முடியாமல் காய்கறி வியாபாரிகளும் அவதிப்பட்டனர்.தற்போது,

மேட்டுப்பாளையம்: காய்கறி வியாபாரிகளுக்கு, கடன் வழங்கக் கோரி பொது தொழிலாளர் சங்கத்தினர், வங்கி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேட்டுப்பாளையம் தாலுகாவில், விவசாய கூலித் தொழிலாளர்களும், காய்கறி வியாபாரிகளும் அதிகளவில் உள்ளனர். இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலால் வேலையின்றி கூலி தொழிலாளர்களும், கடைகள் வைக்க முடியாமல் காய்கறி வியாபாரிகளும் அவதிப்பட்டனர்.தற்போது, தக்காளி, காய்கறிகளின் விலை அதிகளவில் உயர்ந்ததால், அதை வாங்கி விற்பனை செய்ய பொருளாதார சூழல் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால்,காய்கறி வியாபாரிகளுக்கு கடன் வழங்க கோரி, காரமடை சாலை ஸ்டேட் பாங்க் முன், மேட்டுப்பாளையம் தாலுகா சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.பொது செயலாளர் பாஷா தலைமை வகித்தார். நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X