தமிழ்நாடு

வாட்டம் இல்லை; இனி ஓட்டம்! 10 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு... அன்னூரின் தாகம் தீர்ந்தது

Added : நவ 25, 2021
Share
Advertisement
அன்னுார்: அன்னுார் பேரூராட்சியின், 10 ஆண்டு கால குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது. இன்று கூட்டுக் குடிநீர் திட்டத்தில் சோதனை ஓட்டம் நடக்கிறது.அன்னுார் பேரூராட்சியில், செல்லனுார், அல்லி குளம், சொக்கம்பாளையம் குமாரபாளையம் உள்ளிட்ட, 15 கிராமங்கள் உள்ளன. 26 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். 6,500 வீட்டு குடிநீர் இணைப்புகள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக வீடுகள் அதிகரிப்புக்கு ஏற்ப

அன்னுார்: அன்னுார் பேரூராட்சியின், 10 ஆண்டு கால குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது. இன்று கூட்டுக் குடிநீர் திட்டத்தில் சோதனை ஓட்டம் நடக்கிறது.அன்னுார் பேரூராட்சியில், செல்லனுார், அல்லி குளம், சொக்கம்பாளையம் குமாரபாளையம் உள்ளிட்ட, 15 கிராமங்கள் உள்ளன. 26 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். 6,500 வீட்டு குடிநீர் இணைப்புகள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக வீடுகள் அதிகரிப்புக்கு ஏற்ப குடிநீர் வினியோகம் இல்லை. இதனால், 13 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வாக, அன்னுார் பேரூராட்சிக்கு என தனியாக குடிநீர் திட்டம் செயல்படுத்த, பொதுமக்கள் கோரி வந்தனர்.இந்நிலையில், அன்னுார், அவிநாசி, மோப்பிரிபாளையம் ஆகிய மூன்று பேரூராட்சிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யும் வகையில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள், 2019ல் துவக்கப்பட்டது. மூன்று பேரூராட்சிகள், சூலுார் விமானப்படை குடியிருப்பு, பல்லடம், திருப்பூர் ஆகிய இரண்டு ஒன்றியங்களில், 155 கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட உள்ளது.3 லட்சம் பேருக்கு பயன்இந்தத் திட்டத்தில் மூன்று லட்சம் மக்கள் பயன்பெற உள்ளனர். சிறுமுகை அருகே வச்சினம்பாளையத்தில் தினமும், 2 கோடியே 21 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட உள்ளது.அன்னுார் வரும் வழியில் சுமைதாங்கி என்கிற இடத்தில் தினமும் ஒரு கோடி லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அன்னுார் வார சந்தை வளாகத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நிலமட்ட தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு மோட்டார் வாயிலாக குமரன் நகர், சொக்கம்பாளையம், கவுண்டம்பாளையம், ஆலாம்பாளையம் ஆகிய நான்கு இடங்களில், தலா ஒரு லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட உள்ளது. இதற்கான பணிகள் முடிக்கப்பட்டு விட்டன.இதையடுத்து இன்று அன்னுார் நிலமட்ட தொட்டியில் தண்ணீர் நிரப்பி சோதனை ஓட்டம் நடக்கிறது. 10 ஆண்டு கால குடிநீர் பிரச்னைக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது.3 நாளுக்கு ஒருமுறை!அதிகாரிகள் கூறுகையில், 'இன்று சோதனை ஓட்டம் முடிந்த பிறகு, அதிகபட்சம் இரண்டு வாரங்களில் இத்திட்டம் முழுமையாக செயல்பட துவங்கி விடும். குடிநீர் தட்டுப்பாடு முழுமையாக தீரும். தற்போது நாள் ஒன்றுக்கு, 13 லட்சம் லிட்டர் நீர் மட்டுமே அன்னுார் பேரூராட்சிக்கு வருகிறது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் தினமும், 35 லட்சம் லிட்டர் நீர் கூடுதலாக கிடைக்கும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்ய முடியும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X