தமிழ்நாடு

பசுமை ஊராட்சிக்கு இலக்கு! 50 ஆயிரம் நாற்றுகள் 'ரெடி'

Added : நவ 25, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்: காரமடை கெம்மாரம்பாளையம் ஊராட்சி முழுவதும் உள்ள கிராமங்களில், பசுமை ஏற்படுத்த மரக்கன்றுகள் நடும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இருளர்பதி கிராமத்தில் ஊராட்சியின் சார்பில், மரக்கன்றுகள் வளர்க்கும், நாற்றங்கால் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தேக்கு, புளி, ஆலமரம், நீர்மருது, பூவரசு, நாவல், கொடுக்காப்புளி, மாதுளை, கொய்யா, சீதா,

மேட்டுப்பாளையம்: காரமடை கெம்மாரம்பாளையம் ஊராட்சி முழுவதும் உள்ள கிராமங்களில், பசுமை ஏற்படுத்த மரக்கன்றுகள் நடும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இருளர்பதி கிராமத்தில் ஊராட்சியின் சார்பில், மரக்கன்றுகள் வளர்க்கும், நாற்றங்கால் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தேக்கு, புளி, ஆலமரம், நீர்மருது, பூவரசு, நாவல், கொடுக்காப்புளி, மாதுளை, கொய்யா, சீதா, நெல்லி, எலுமிச்சை ஆகிய நாற்றுகள் வளர்க்கும் பணி நடக்கிறது.ஊராட்சி முழுவதும் மர நாற்றுக்கள் நட்டு, பசுமையாக்கும் நடவடிக்கையில், ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.ஊராட்சி தலைவர் செல்வி நிர்மலா கூறியதாவது:ஊராட்சியில் செல்வபுரம் பகுதியில், 5 ஏக்கரிலும், சின்ன கண்டியூரிலும் அடர்காடுகள் வளர்க்கும் திட்டத்தில், மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஊராட்சி முழுவதும் உள்ள கிராமங்களில் இதுவரை, 25 ஆயிரம் நாற்றுகள் நட்டு, மரங்கள் ஓரளவுக்கு வளர்ந்துள்ளன. நாற்றங்கால் பண்ணையில், 50 ஆயிரம் நாற்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. மர நாற்றுகளை உற்பத்தி செய்யும் பணிகளில், தேசிய வேலை உறுதி திட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு நாற்று பத்து ரூபாய் வீதம், பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் ஊராட்சிக்கு கூடுதலான வருவாய் கிடைக்க உள்ளது. இரண்டு, மூன்று ஆண்டுகளில், மரங்கள் நிறைந்த பசுமை ஊராட்சியாக மாறும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X