தமிழ்நாடு

முதுமலையில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி துவக்கம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
கூடலுார்: முதுமலையில், நேற்று துவங்கிய வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி, ஐந்து நாட்கள் நடக்கிறது.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்கு கணக்கெடுப்பு மற்றும் வாழ்விட மதிப்பீடு பணி நேற்று துவங்கியது.காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் மேற்பார்வையில், வனச்சரகர்கள் விஜய், மனோகரன், மாரியப்பன், மனோஜ்குமார், ராஜேந்திரன் தலைமையில் வனப்பகுதி, 37 பகுதிகளாக

கூடலுார்: முதுமலையில், நேற்று துவங்கிய வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி, ஐந்து நாட்கள் நடக்கிறது.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்கு கணக்கெடுப்பு மற்றும் வாழ்விட மதிப்பீடு பணி நேற்று துவங்கியது.காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் மேற்பார்வையில், வனச்சரகர்கள் விஜய், மனோகரன், மாரியப்பன், மனோஜ்குமார், ராஜேந்திரன் தலைமையில் வனப்பகுதி, 37 பகுதிகளாக பிரிக்கப்பட்டது.ஒரு பகுதிக்கு தலா நான்கு பேர் வீதம், 148 வன ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.கணக்கெடுப்பு பணியின் போது, நேரடியாக, தென்படும் வனவிலங்குகள்; கால் தடம்; எச்சம் மற்றும் இனம் கண்டு அதன் விபரங்களை, டேட்டா சீட் மற்றும் மொபைல் செயலியில் பதிவு செய்து வருகின்றனர். இப்பணிகள், 29ம் தேதி வரை நடக்கிறது.வனத்துறையினர் கூறுகையில், 'கணகெடுப்பு பணிகள், விபரங்கள்; தெப்பக்காட்டில் உள்ள கண்காணிப்பு மையத்தில், 30ம் தேதி பதிவிறக்கம் செய்யப்படும். சுற்றுலா பயணிகளுக்கான வாகன சவாரி வழக்கம் போல் நடக்கும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X