தமிழ்நாடு

ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை வழக்கு: கேரள போலீஸ் 2ம் நாளாக விசாரணை

Added : நவ 25, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக, பொள்ளாச்சியில் நேற்று இரண்டாம் நாளாக தடயவியல் நிபுணர்களுடன் கேரள போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.கேரள மாநிலம், பாலக்காடு அருகே எலப்புள்ளியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் சஞ்ஜித், 27, கடந்த, 15ம் தேதி மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் இரண்டு பேரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.இந்நிலையில், கோவை

பொள்ளாச்சி: ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக, பொள்ளாச்சியில் நேற்று இரண்டாம் நாளாக தடயவியல் நிபுணர்களுடன் கேரள போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.கேரள மாநிலம், பாலக்காடு அருகே எலப்புள்ளியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் சஞ்ஜித், 27, கடந்த, 15ம் தேதி மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் இரண்டு பேரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அதில், கொலையாளிகள் பயன்படுத்திய 'மாருதி 800' கார், 15 ஆயிரம் ரூபாய்க்கு ஏஜென்ட் வாயிலாக, பொள்ளாச்சி குஞ்சிபாளையம் பிரிவில், பழைய இரும்பு குடோன் வைத்திருக்கும் முருகானந்தம் என்பவரிடம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இரும்பு குடோனில் கேரள போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.நேற்றும் இரண்டாம் நாளாக விசாரணை தொடர்ந்தது. கேரள போலீசார், தடயவியல் நிபுணர் குழுவுடன், குஞ்சிபாளையம் பிரிவு இரும்பு குடோனில் ஆய்வு செய்தனர்.அப்போது, 'மாருதி 800' கார் உடைக்கப்பட்டு உபகரணங்கள் வேறு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட விபரங்களையும், குடோன் உரிமையாளரிடம் விசாரித்தனர். தடயவியல் நிபுணர்கள், வாகனம் குறித்த ஆவணங்களின் தடயங்கள் உள்ளதா என ஆய்வு செய்தனர்.கேரள போலீசார் கூறியதாவது:கொலையாளிகள் பயன்படுத்திய காரை உறுதி செய்யும் வகையில், ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.இந்த காரின் உதிரிபாகங்கள் பாதி விற்கப்பட்டு, சேலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. அங்கேயும் ஒரு 'டீம்' போலீசார் சென்று, காரின் பாகங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X