தமிழ்நாடு

விசைத்தறிகளுக்கு கூலி உயர்வு வரும் டிச.,1 முதல் வழங்கப்படும்!

Added : நவ 25, 2021
Share
Advertisement
கோவை: 'விசைத்தறிகளுக்கு கூலி உயர்வு வரும் டிச.,1 முதல் வழங்கப்படும்,' என கோவையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் கூலி உயர்வு தொடர்பாக ஜவுளி உற்பத்தியாளர்களுடன், அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.கோவை கலெக்டர் அலுவலக

கோவை: 'விசைத்தறிகளுக்கு கூலி உயர்வு வரும் டிச.,1 முதல் வழங்கப்படும்,' என கோவையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் கூலி உயர்வு தொடர்பாக ஜவுளி உற்பத்தியாளர்களுடன், அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.கோவை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்தில் அனைத்து தரப்பினர் கருத்துக்களை விரிவாக கேட்டு அறியப்பட்டது. கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களின் கூலிக்கு நெசவு செய்யும் உரிமையாளர்கள் மற்றும் அவர்களிடம் பணி செய்யும் தொழிலாளர் நலன் கருத்தில் கொள்ளப்பட்டது.இதன்படி, 2014 ல் மார்ச் 25 ம் தேதி அறிவிக்கப்பட்ட கூலி உயர்வுடன், சோமனுார் ரகத்துக்கு, 23 சதவீதம், பிற ரகங்களுக்கு 20 சதவீதம்,கூலி உயர்த்தி வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் வழங்க உடன்பாடு ஏற்பட்டது.கூட்டத்தில், திருப்பூர் கலெக்டர் வினீத், கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலாஅலெக்ஸ் மற்றும் தொழிலாளர் நலத்துறை இணை கமிஷனர் லீலாவதி, கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் கோயமுத்துார் மற்றும் திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர் சார்பாக பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X