பொது செய்தி

தமிழ்நாடு

வருமான வரி செலுத்துவோரின் விபரம் வாங்குது உணவுத்துறை

Added : நவ 25, 2021
Share
Advertisement
சென்னை:ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் முறைகேட்டை தடுக்க, வருமான வரி செலுத்துவோரின் விபரங்களை வழங்குமாறு, வருமான வரித்துறையிடம் உணவுத்துறை கேட்டுள்ளது.தமிழக ரேஷன் கடைகளில், 2.15 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி, கோதுமை உள்ளிட்ட அனைத்து உணவு பொருட்களும்; 3.84 லட்சம் சர்க்கரை கார்டுதாரர்களுக்கு அரிசி தவிர்த்த மற்ற பொருட்களும் வழங்கப்படுகின்றன.உணவு

சென்னை:ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் முறைகேட்டை தடுக்க, வருமான வரி செலுத்துவோரின் விபரங்களை வழங்குமாறு, வருமான வரித்துறையிடம் உணவுத்துறை கேட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், 2.15 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி, கோதுமை உள்ளிட்ட அனைத்து உணவு பொருட்களும்; 3.84 லட்சம் சர்க்கரை கார்டுதாரர்களுக்கு அரிசி தவிர்த்த மற்ற பொருட்களும் வழங்கப்படுகின்றன.உணவு மானியத்திற்காக ஆண்டுக்கு 8,400 கோடி ரூபாயை, அரசு செலவு செய்கிறது.

நாட்டில் தமிழகத்தில் மட்டுமே அனைவருக்குமான பொது வினியோக திட்டம் உள்ளது. மத்திய - மாநில அரசு ஊழியர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள்என, வசதி படைத்த பலரும் அரிசி கார்டு வைத்துள்ளனர்.அவர்கள், ரேஷன் பொருட்களை வாங்குவதில்லை. எனவே, அவற்றை விற்றது போல் பதிவு செய்து ரேஷன் ஊழியர்கள் முறைகேடு செய்கின்றனர்.
இதற்கு, வாங்காத பொருட்களை வாங்கியது போல, மொபைல் போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., வந்தாலும்கார்டுதாரர்கள் புகார் அளிக்காததே முக்கிய காரணம். இதனால், கார்டுதாரர்களின் கைரேகை பதிந்தும், முறைகேட்டை முழுதுமாக தடுக்க முடியவில்லை. இது குறித்து கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு, காஸ் சிலிண்டர் மானிய தொகையை, வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை துவக்கிய போது, வசதி படைத்தவர்கள் மானியத்தை விட்டு தர வலியுறுத்தியது;

பலரும் மானியத்தை விட்டு கொடுத்தனர்.ரேஷன் பொருட்களை அரசுக்கு விட்டு தரும் வசதி இருந்தாலும், பொருட்கள் வாங்காத யாரும் விட்டு தராமல் உள்ளனர். இதனால், முறைகேடு தொடர்கிறது.எனவே, தமிழகத்தைச்சேர்ந்த வருமான வரி செலுத்த கூடியவர்களின் விபரங்களை, அவர்களின், 'ஆதார்' எண்ணுடன் வழங்குமாறு, வருமான வரித் துறையிடம் கேட்கப்பட்டு உள்ளது. அந்த விபரம் கிடைத்ததும், கார்டுதாரர்களின் ஆதார் எண்ணுடன் ஒப்பிட்டு பார்த்தால், வருமான வரி செலுத்த கூடிய ரேஷன் கார்டுதாரர்களின் விபரம் தெரிய வரும். அவர்களிடம் பொருட்களை விட்டுத் தரும்படி வலியுறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால், முறைகேடு கட்டுப்படுத்தப்படும்; அரசுக்கும் செலவு குறையும். எனினும், வருமான வரித் துறையிடம் இருந்து விபரங்கள் கிடைப்பது தொடர்பாக, இதுவரை சாதகமான பதில் வரவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.தமிழகத்தில் ஆண்டுதோறும், 45 லட்சம் பேர் வரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X