பொது செய்தி

தமிழ்நாடு

'பெட்ரோ கெமிக்கல்ஸ்' திட்டங்கள் தமிழகத்தில் அமைக்க வலியுறுத்தல்

Added : நவ 25, 2021
Share
Advertisement
'சிறப்பான கட்டமைப்புகள் இருப்பதால், 'பெட்ரோ கெமிக்கல்ஸ்' உற்பத்தி மையங்கள் மற்றும் அவற்றின் விரிவாக்கத் திட்டங்களை தமிழகத்தில் நிறுவ முன்வர வேண்டும்,'' என, தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.நாடு முழுதும் உள்ள ரசாயன மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் உற்பத்தி மையங்கள் குறித்த மாநாடு, நேற்று டில்லியில் நடந்தது. இதில், தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

'சிறப்பான கட்டமைப்புகள் இருப்பதால், 'பெட்ரோ கெமிக்கல்ஸ்' உற்பத்தி மையங்கள் மற்றும் அவற்றின் விரிவாக்கத் திட்டங்களை தமிழகத்தில் நிறுவ முன்வர வேண்டும்,'' என, தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
நாடு முழுதும் உள்ள ரசாயன மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் உற்பத்தி மையங்கள் குறித்த மாநாடு, நேற்று டில்லியில் நடந்தது. இதில், தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:வரும் 2030க்குள் 75 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு உடையதாக தமிழக பொருளாதாரத்தை மாற்றுவதே மாநில அரசின் லட்சியம். அதற்கு, பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையின் விரிவாக்க நடவடிக்கைகள் நிச்சயம் உந்து சக்தியாக இருக்கும்.இத்துறையை வலுப்படுத்துவதற்கு என்றே பிளாஸ்டிக் உற்பத்திக்காக, 306 ஏக்கர் பரப்பளவில் பாலிமர் பூங்கா, மருந்து பொருட்களுக்கான தொழில் பூங்கா, ஜவுளி பூங்கா ஆகியவை அமைக்கப்பட உள்ளன.

மேலும், நகரங்களில் எரிவாயு வினியோக குழாய்கள் நிறுவிடவும் முயற்சிகள் எடுக்கப் பட்டு வருகின்றன.முதலீட்டாளர்களுக்கான சேவைகளை வழங்க ஒற்றைச் சாளர இணைய தளம் 2.0 துவக்கப்பட்டுள்ளதோடு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேவையை வழங்குவதற்காக மொபைல் போன் செயலியும் துவக்கப்பட்டுள்ளது.அரசு துறைகளில் சிக்கல்களோ, தாமதங்களோ ஏற்பட்டால் அவற்றை சரிசெய்ய, 'பிஸ் பட்டீ' எனப்படும் தொழில் நண்பன் என்ற குறைதீர் இணையதளமும் நிறுவப்பட்டுள்ளது.
எனவே, தமிழகத்தில் உள்ள இந்த சிறப்பான உட்கட்டமைப்புகளை பயன்படுத்தி பெட்ரோ கெமிக்கல்ஸ் உற்பத்தி மையங்கள் மற்றும் அவற்றின் விரிவாக்க திட்டங்களை தமிழகத்தில் நிறுவ முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
- நமது டில்லி நிருபர் -'

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X