சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கங்கனா ரணாவத்துக்கு 'சம்மன்'

Added : நவ 25, 2021
Share
Advertisement
புதுடில்லி:சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வை துாண்டும் வகையில் பதிவு களை வெளியிடுவதாக கூறி, நடிகை கங்கனாவுக்கு டில்லி சட்டசபையின் அமைதி மற்றும் நல்லிணக்க குழு , 'சம்மன்' அனுப்பியது. சீக்கிய விவசாயிகளை விமர்சிக்கும் வகையில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். போராட்டம் நடத்திய சீக்கியர்களை காலிஸ்தானி பயங்கரவாதிகளுடன்

புதுடில்லி:சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வை துாண்டும் வகையில் பதிவு களை வெளியிடுவதாக கூறி, நடிகை கங்கனாவுக்கு டில்லி சட்டசபையின் அமைதி மற்றும் நல்லிணக்க குழு , 'சம்மன்' அனுப்பியது.

சீக்கிய விவசாயிகளை விமர்சிக்கும் வகையில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். போராட்டம் நடத்திய சீக்கியர்களை காலிஸ்தானி பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டு அவர் வெளியிட்ட அறிக்கை சர்ச்சையானது.
கங்கனாவின் கருத்து, சீக்கிய சமூகத்தினரை ஆத்திரமடைய வைத்துள்ளது. அவர் மீது போலீசிடமும் பலர் புகார் அளித்து வழக்குப்பதிவும் செய்துஉள்ளனர்.இந்நிலையில் சமூக வலை தளங்களில் வெறுப்புணர்வை துாண்டும் வகையில் பதிவுகளை வெளியிடுவதாக கூறி, கங்கனாவுக்கு டில்லி சட்டசபையின் அமைதி மற்றும் நல்லிணக்க குழு நேற்று சம்மன் அனுப்பியது. டிசம்பர் 6ம் தேதி பகல் 12:00 மணிக்கு, நேரில் ஆஜராகக் கோரி அவருக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X