பொது செய்தி

தமிழ்நாடு

முனைவர் பட்டப் படிப்பு ஊக்கத்தொகை உயர்வு

Added : நவ 25, 2021
Share
Advertisement
சென்னை:முனைவர் பட்டப்படிப்பு படிக்கும், ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ - மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி ஊக்கத்தொகை, 1 லட்சம்ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், 2013 - 14ம் கல்வியாண்டு முதல், முழு நேர முனைவர் பட்டப் படிப்பு படிக்கும், முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் ஆண்டைச் சேர்ந்த, 700 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ - மாணவியருக்கு, கல்வி ஊக்கத்தொகையாக, தலா 50

சென்னை:முனைவர் பட்டப்படிப்பு படிக்கும், ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ - மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி ஊக்கத்தொகை, 1 லட்சம்ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 2013 - 14ம் கல்வியாண்டு முதல், முழு நேர முனைவர் பட்டப் படிப்பு படிக்கும், முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் ஆண்டைச் சேர்ந்த, 700 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ - மாணவியருக்கு, கல்வி ஊக்கத்தொகையாக, தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
அடுத்து 2017 - 18ம் ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை, 700ல் இருந்து 1,200 ஆக உயர்த்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டு, கல்வி ஊக்கத்தொகை வழங்க 6 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.தி.மு.க., அரசு தாக்கல் செய்த திருத்திய பட்ஜெட்டில், 'முனைவர் பட்டப் படிப்புகளுக்கான கல்வி உதவி தொகை திட்டம், அதிக மாணவர்கள் பயன்பெறும் வகையில் மறு சீரமைக்கப்படும். 'கல்வி உதவித்தொகை, ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் என்ற அளவில் உயர்த்தப்படும். இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, 16 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்' என அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நிதி ஒதுக்கீட்டை 16 கோடி ரூபாயாகவும்; மாணவர்களுக்கான ஊக்கத்தொகை, 50 ஆயிரம் ரூபாயில் இருந்து, 1 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 1,600 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவும், ஊக்கத்தொகை பெறும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானத்தை, 8 லட்சம் ரூபாயாக உயர்த்தியும், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X