அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கலைஞர் உணவகம்' தமிழக அரசு அறிவிப்பு

Added : நவ 25, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
''தமிழகம் முழுதும் ஏற்கனவே 650 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வரும் நிலையில், 'கலைஞர் உணவகம்' என்ற பெயரில் மேலும் 500 சமுதாய உணவகங்கள் அமைக்கப்பட உள்ளன,'' என, தமிழக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.மாதிரி சமுதாய சமையல் அறை திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து, டில்லியில், மத்திய உணவுத் துறை அமைச்சர்பியுஷ் கோயல் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில்

''தமிழகம் முழுதும் ஏற்கனவே 650 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வரும் நிலையில், 'கலைஞர் உணவகம்' என்ற பெயரில் மேலும் 500 சமுதாய உணவகங்கள் அமைக்கப்பட உள்ளன,'' என, தமிழக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
மாதிரி சமுதாய சமையல் அறை திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து, டில்லியில், மத்திய உணவுத் துறை அமைச்சர்பியுஷ் கோயல் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:
தமிழகம் முழுதும் 650 இடங்களில், அம்மா உணவகம் என்ற பெயரில் சமூக உணவகங்கள் அரசின் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு தரமான உணவை, மானிய விலையில் அரசு வழங்கி வருகிறது.இதேபோல கூடுதலாக500 சமுதாய உணவகங்கள், கலைஞர் உணவகம் என்ற பெயரில் அமைக்கப்பட உள்ளன. ஒரு உணவகம் நடத்த, சராசரியாக மாதந்தோறும் 3.5 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது.
இந்த திட்டத்தை தடையின்றி தொடர வேண்டுமெனில் மத்திய அரசின் ஆதரவும் தேவை. எனவே, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முழுமையாக 100 சதவீத நிதி உதவி வழங்கினால் தான், இந்த சமுதாய உணவகங்களை விரிவாக்கம் செய்து வெற்றிகரமாக நடத்த முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.
- நமது டில்லி நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
26-நவ-202110:11:17 IST Report Abuse
jayvee கலைஞர் உணவகத்தில் மாமிச உண்வும் ஸ்டார்டர் ட்ரிங்க்ஸும் கிடைக்குமா ? பொறுத்திருந்து பாப்போம்
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
26-நவ-202101:54:35 IST Report Abuse
Milirvan எதுக்கு கஷ்டப்படணும்? பேசாமல் டாஸ்மாக்'கை 'கலைஞர் உணவகம்' என்று பெயர் மாற்றம் செய்திடலாமே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X