பொது செய்தி

இந்தியா

கடற்படையில் இணைந்தது 'வேலா' நீர்மூழ்கி கப்பல்

Added : நவ 25, 2021
Share
Advertisement
மும்பை:அதிநவீன வசதிகள் உடைய 'ஸ்கார்பியன்' ரக நீர்மூழ்கி கப்பலான 'ஐ.என்.எஸ்., வேலா', கடற்படையில் இணைந்தது. ஐரோப்பிய நாடான பிரான்சின் தொழில்நுட்ப உதவியுடன், நம் கடற்படைக்கு ஆறு, ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. உள்நாட்டிலேயே கட்டமைக்கப்படும் இந்த வகை நீர்மூழ்கி கப்பல்களில் கல்வாரி, காந்தேரி, கராஞ்ச் ஆகியவை ஏற்கனவே கடற்படைக்கு
 கடற்படையில் இணைந்தது 'வேலா' நீர்மூழ்கி கப்பல்

மும்பை:அதிநவீன வசதிகள் உடைய 'ஸ்கார்பியன்' ரக நீர்மூழ்கி கப்பலான 'ஐ.என்.எஸ்., வேலா', கடற்படையில் இணைந்தது.

ஐரோப்பிய நாடான பிரான்சின் தொழில்நுட்ப உதவியுடன், நம் கடற்படைக்கு ஆறு, ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. உள்நாட்டிலேயே கட்டமைக்கப்படும் இந்த வகை நீர்மூழ்கி கப்பல்களில் கல்வாரி, காந்தேரி, கராஞ்ச் ஆகியவை ஏற்கனவே கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தற்போது நான்காவதாக ஐ.என்.எஸ்.,வேலா நீர்மூழ்கி கப்பல்,கடற்படையுடன் இணைக்கப் பட்டது. மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள 'மசகோன்' என்ற நிறுவனம் இதை கட்டமைத்துஉள்ளது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் கடற்படையின் தலைமை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங் பங்கேற்றார்.
கடலுக்கு அடியில் இருந்து, நிலத்தில் உள்ள இலக்கு மற்றும் எதிரிநாட்டு நீர்மூழ்கி கப்பலை தாக்கக் கூடிய ஏவுகணைகளை சுமந்து செல்லும் நவீன தொழில்நுட்பங்கள் கொண்டது, இந்த நீர்மூழ்கி கப்பல். மேலும், எதிரியின் ரேடாரில் சிக்காமல் தப்பக் கூடிய தொழில்நுட்பத்துடன் இது கட்டமைக்கப்பட்டுள்ளது.இந்த நீர்மூழ்கி கப்பல் வாயிலாக கடற்படையின் பலம் மேலும் அதிகரிக்கும்.

கடந்த வாரத்தில், ஐ.என்.எஸ்., விசாகப்பட்டினம் என்ற போர்க் கப்பல், கடற்படையுடன் இணைக்கப்பட்டது. பாக்.,குக்கு உதவும் சீனா!கடற்படை தலைமை தளபதி கரம்பிர் சிங் நேற்று கூறியதாவது:பாகிஸ்தான் - சீனா இடையிலான கடல் ஒத்துழைப்பை இந்தியா கவனத்துடன் கண்காணித்து வருகிறது. கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் உட்பட ராணுவம் சார்ந்த பல்வேறு பொருட்களை பாகிஸ்தானுக்கு சீனா ஏற்றுமதி செய்கிறது. இது நம் பாதுகாப்பு சூழலை வெகுவாக பாதிக்கும்; இதை சமாளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X