பொது செய்தி

தமிழ்நாடு

கமல் நலம் பெற வேண்டி பால்குடம் எடுத்து வழிபாடு

Added : நவ 25, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:கமல்ஹாசன் நலம் பெற வேண்டி, மக்கள் நீதி மய்யத்தினர் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கொரோனா தொற்று காரணமாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் பூரண நலம் பெற வேண்டி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள, கோவில்களில் சிறப்பு வழிபாடுகளை, அவரது கட்சியினர் மேற்கொண்டு
 கமல் நலம் பெற வேண்டி பால்குடம் எடுத்து வழிபாடு

சென்னை:கமல்ஹாசன் நலம் பெற வேண்டி, மக்கள் நீதி மய்யத்தினர் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கொரோனா தொற்று காரணமாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் பூரண நலம் பெற வேண்டி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள, கோவில்களில் சிறப்பு வழிபாடுகளை, அவரது கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் சந்திப்பில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில், நேற்று சிறப்பு வழிபாடு செய்தனர்.மாவட்ட செயலர் மோகன் தலைமையில், கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர், பால்குடம் ஏந்தி கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின், அம்மனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இந்நிகழ்ச்சியில், நிர்வாகிகள் கவுஸ்பாசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
26-நவ-202112:36:03 IST Report Abuse
jayvee கவுஸ் பாஷா பால் குடம் ஏந்தி அம்மன் கோவிலுக்கு வந்தார் ? இதை மத நல்லிணக்கம் என்று கூறுவதா அல்லது கமலின் தலை விதி என்று சொல்வதா ? கடவுள் நம்பிக்கை ..குறிப்பாக ஹிந்துக்கடவுள்கள் மீது நம்பிக்கை இல்லாத கிருத்துவ கமலுக்கு பெரியாரின் அடிமைக்கு பால் குடம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X