செய்தி செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க கொடுபிடி

Added : நவ 25, 2021
Share
Advertisement
கோவை: விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குவதற்கு, வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன.விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குவது தொடர்பாக, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் இந்துமதி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கடன் கேட்போரின் விண்ணப்பத்துக்கு 'சீனியாரிட்டி' எண் வழங்கி பதிவு செய்து, தனி பதிவேடு பராமரிக்க வேண்டும்.

கோவை: விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குவதற்கு, வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன.விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குவது தொடர்பாக, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் இந்துமதி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கடன் கேட்போரின் விண்ணப்பத்துக்கு 'சீனியாரிட்டி' எண் வழங்கி பதிவு செய்து, தனி பதிவேடு பராமரிக்க வேண்டும். கோவில் மற்றும் வனத்துறைக்குச் சொந்தமான நிலங்களை குத்தகைக்கு எடுத்து பயிர் சாகுபடி செய்யும் உறுப்பினர்களுக்கு, வி.ஏ.ஓ., சான்றுடன் கடன் வழங்க வேண்டும்.கடன் வழங்கிய பின், சங்க செயலர் நேரில் சென்று, பயிர் சாகுபடி செய்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். பயிர் சாகுபடி செய்யாமல் இருந்தால், கடன் தொகையை வட்டியுடன் வசூலிக்க வேண்டும்.பதிவு கரும்புக்கடன் பரிந்துரை சீட்டுகளை, சர்க்கரை ஆலையில் இருந்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு நேரடியாக அனுப்ப வேண்டும். அடங்கல் சான்றில் குறிப்பிட்டுள்ள பரப்புக்கு மட்டும் கடன் வழங்க வேண்டும்.சர்க்கரை ஆலையில் இருந்து விடுவிக்கப்படும் கரும்புக்கான தொகையில், முதலில் பயிர்க்கடனுக்கும், பின், பயிரிடுவதற்காக வழங்கப்பட்ட சொட்டு நீர் பாசனம், கிணறு துார்வாருதல், கிணறு சுற்றுச்சுவர் கட்டுதல், மின் மோட்டார் வைத்தல் போன்ற கடன்களுக்கான தவணையையும் வரவு வைத்து விட்டு, மீதமுள்ள தொகையை, உறுப்பினரின் சேமிப்பு கணக்கில் வரவு வைக்க வேண்டும்.கடனுக்கான தொகையை வரவு வைக்காமல், சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்பட்டு, கடன் கணக்கு நேர் செய்யப்படாமல் இருந்தால், சங்க செயலாளரே பொறுப்பு.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X