பொது செய்தி

தமிழ்நாடு

நல்லெண்ண அடிப்படையில் 700 ஆயுள் கைதிகள் விடுதலை!

Updated : நவ 26, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (63)
Share
Advertisement
சென்னை :தமிழகத்தில் நல்லெண்ண அடிப்படையிலும், மனிதாபிமான அடிப்படையிலும், ஆயுள் தண்டனை கைதிகள் ௭௦௦ பேர் விடுதலை செய்யப்படுகின்றனர். நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்து வருவோருக்கு சலுகை அளித்து, தண்டனையை குறைத்து, முன்னரே விடுதலை செய்ய, தமிழக அரசு முறைப்படி அரசாணை வெளியிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 113வது பிறந்த நாள், செப்., 15ல் கொண்டாடப்பட்டது. அவரது
 700 ஆயுள் கைதிகள் விடுதலை!

சென்னை :தமிழகத்தில் நல்லெண்ண அடிப்படையிலும், மனிதாபிமான அடிப்படையிலும், ஆயுள் தண்டனை கைதிகள் ௭௦௦ பேர் விடுதலை செய்யப்படுகின்றனர். நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்து வருவோருக்கு சலுகை அளித்து, தண்டனையை குறைத்து, முன்னரே விடுதலை செய்ய, தமிழக அரசு முறைப்படி அரசாணை வெளியிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 113வது பிறந்த நாள், செப்., 15ல் கொண்டாடப்பட்டது.

அவரது பிறந்த நாளையொட்டி, நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனையை, நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் குறைத்து, முன்னதாகவே விடுதலை செய்ய, அரசு நடவடிக்கை எடுக்கும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என, செப்., 13ல் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.


வழிமுறைகள்அதன் அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனையை குறைத்து, விடுதலை செய்வதற்கான வழிமுறைகளை வகுத்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விபரம்:
* இந்திய அரசியலமைப்பின் 161வது பிரிவின்படி, விடுதலை செய்வதற்கான விதிமுறைகள் வெளியிடப்படுகின்றன

* இந்தாண்டு செப்., 15 நிலவரப்படி, 10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்கள், குறிப்பாக நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டவர்கள், சில கட்டுப்பாடுகளின் கீழ், முன்னதாக விடுதலை செய்யப்படலாம்

* பாலியல் பலாத்காரம், மோசடி, வழிப்பறி, கொள்ளை, பயங்கரவாத குற்றங்கள், மாநிலத்துக்கு எதிரான குற்றம், சிறையில் இருந்து தப்பிக்க முயற்சித்த குற்றம், கள்ள நோட்டு தயாரித்தல், பெண்களுக்கு எதிரான குற்றம் புரிந்தவர்கள், வரதட்சணை மரணம், பொருளாதார குற்றங்கள், கள்ளச்சந்தை, கடத்தல்.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், விஷம் கலந்த சாராயம் விற்றல், வனம் தொடர்பான குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவோர், ஒன்றுக்கு மேற்பட்டவர்களை கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்றவர்கள், ஜாதி மற்றும் மத வன்முறையில் ஈடுபட்டவர்கள் போன்றோர், முன்னதாக விடுதலை செய்ய தகுதியற்றவர்கள்

* அதேபோல, ஊழல் ஒழிப்பு சட்டம், போதை தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றவர்கள், இதர வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் போன்றோருக்கும், முன்னதாக விடுதலை அளிக்கக் கூடாது

* இது தவிர, 20 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்தவர்களையும், இதே கட்டுப்பாடுகளின் கீழ் முன்னரே விடுதலை செய்யலாம். அவ்வாறு விடுதலை செய்யப்படுவோரிடம், அதற்கான உறுதிமொழி பத்திரம் வாங்க வேண்டும்

* முன்னதாக விடுதலை என்பதை, ஆயுள் தண்டனை கைதிகள் உரிமையாக கருத முடியாது

* அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வருவோருக்கு மட்டும், முன்னரே விடுதலை அளிக்கப்பட வேண்டும். இந்த சலுகை நீட்டிக்கப்படக் கூடாது

* விதிமுறைகளின்படி, முன்னதாக விடுதலை அளிக்கப்படுவதை, மாநில அளவில் டி.ஜி.பி., அல்லது சிறைத்துறை தலைவர், சிறைத்துறை தலைமையிடத்து டி.ஐ.ஜி., உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு முன்னதாக, மாவட்ட அளவில் மத்திய சிறை கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவினர், ஆய்வு செய்து அனுமதி அளிக்க வேண்டும்

* மண்டல அளவில், மண்டல சிறைத்துறை டி.ஐ.ஜி., உள்ளிட்ட அதிகாரிகள், மாவட்ட அளவிலான குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து, தகுதியானவர்கள் பட்டியலை மாநில அளவிலான குழுவுக்கு அனுப்ப வேண்டும்.
இறுதியாக, டி.ஜி.பி., அல்லது சிறைத்துறை டி.ஜி.பி., உரிய விதிகளின்படி, ஒவ்வொரு வழக்கிலும் விதிமுறைகளின்படி முடிவெடுத்து, அரசின் பரிந்துரைக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவையில் 99 பேர்!கோவை மத்திய சிறையில் விசாரணை, தண்டனை கைதிகள் என 1,900க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர்; 40க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் உள்ளனர். தமிழக அரசின் சிறப்பு சலுகை அடிப்படையில், 99 கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர். இது குறித்து கோவை மத்திய சிறை அதிகாரிகள் கூறுகையில், 'கோவை மத்திய சிறையில், ௧௦ ஆண்டு கள் தண்டனை காலம் கடந்த 132 கைதிகள் உள்ளனர். 'இவர்கள் விடுதலை செய்யப்பட்டால், இவர்களால் யாரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்காது என கருதப்படும் 99 கைதிகள், விடுதலைக்கு தகுதி வாய்ந்தவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களை அரசு உத்தரவுப்படி, விடுதலை செய்வதற்கான பணி நடக்கிறது' என்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - Salmiyah,குவைத்
27-நவ-202110:38:45 IST Report Abuse
suresh kumar உள்ளாச்சி தேர்தல் வேலைகளுக்கு அடியாட்கள் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய இந்த ஏற்பாடா?
Rate this:
Cancel
26-நவ-202122:49:49 IST Report Abuse
சாம் தியாக உபிக்கள், அமைதி மார்க்க அறிஞர்கள், பாவாடை கிரிமினல்கள் ஆகியோர் விடுதலை என்று சூசகமாக சொல்லுகிறார்...
Rate this:
Cancel
26-நவ-202122:48:44 IST Report Abuse
சம்பத் குமார் 1). கோவை குண்டு வெடிப்பு கலவரத்தில் எத்தனையோ குடும்பங்கள் நடுத்தெருவில் வந்தன.2). அதில் சிறுபான்மையினர் முஸ்லிம் குடும்பங்கள் உள்பட.3). உயர்திரு கலைஞர் அவர்கள் இத்தேமாதிரி விடுதலை கொடுத்தார்.4). தந்தை எந்த வழியோ தமையன் அந்த வகையில்.5). சிறையில் இருக்கும் குற்றவாளிகளுக்கு விடுதலை கொடுக்க மாநில அரசாங்கத்திற்கு எந்த உரிமையூம் கிடையாது.6). அந்த உரிமை கோர்ட் அதற்கு மீறி கவர்னருக்கு உள்ளது.7). இந்தமாதிரியான அதிகார துஸ்பிரயோகம் கிரிமினல் நடவடிக்கையை தமிழகம் அல்லாது இந்தியா முழுவதும் ஊக்குவிக்கும்.8). மேலும் இது நமது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் கொலையாளிகளை உற்சாகப்படுத்தும்..9). முதல்வர் தமிழ்நாடு மக்களின் மேல் அக்கறை கொள்ள வேண்டும்.10). வெட்டி வேலை இது. 11). திறமையற்ற முதல்வர் மற்றும் சுயநலமான இராவணன் கேரக்டர் ஒத்த தலைவர் என்பதை இது பறை சாற்றுகிறுது..12). இராவணனுக்கு உயர்திரு அனுமான் மற்றும் இராமரால் நடந்த நிகழ்வுகள் இனிமேல் நடக்கும். நன்றி வணக்கம் ஐயா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X