மாடித்தோட்டத்தால்...| Dinamalar

செய்தி செய்தி

தமிழ்நாடு

மாடித்தோட்டத்தால்...

Added : நவ 25, 2021
Share
கோவை: தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், மாடித்தோட்டமாகவும், வீடுகளில் தொட்டிகளிலும் தக்காளி நட்டுள்ளவர்கள், விலையுயர்வில் இருந்து தப்பிய மகிழ்ச்சியில் உள்ளனர்.கடும் விலையுயர்வு காரணமாக, வீடுகளில் தக்காளி பயன்படுத்துவதில் இல்லத்தரசிகள் கவனமாக உள்ளனர். இரண்டு கிலோ வாங்க வேண்டிய இடத்தில் அரை கிலோ வாங்கி, அதையும் பல நாட்களுக்கு பார்த்துப் பார்த்து

கோவை: தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், மாடித்தோட்டமாகவும், வீடுகளில் தொட்டிகளிலும் தக்காளி நட்டுள்ளவர்கள், விலையுயர்வில் இருந்து தப்பிய மகிழ்ச்சியில் உள்ளனர்.கடும் விலையுயர்வு காரணமாக, வீடுகளில் தக்காளி பயன்படுத்துவதில் இல்லத்தரசிகள் கவனமாக உள்ளனர். இரண்டு கிலோ வாங்க வேண்டிய இடத்தில் அரை கிலோ வாங்கி, அதையும் பல நாட்களுக்கு பார்த்துப் பார்த்து பயன்படுத்துகின்றனர்.சிலர் மாடித்தோட்டங்களில் தக்காளி நட்டுள்ளனர். சிலர் தொட்டிகளில் தக்காளிச் செடி வளர்க்கின்றனர். அவற்றில் இருந்து கிடைக்கும் ஒரு சில தக்காளிப் பழங்களைப் பயன்படுத்தி, வெளி மார்க்கெட்டில், தக்காளி வாங்காமல் தவிர்த்து வருகின்றனர்.விலை குறையும் வரை இந்த தக்காளிகள் கை கொடுக்கும் என்பதால், மாடித்தோட்டம் வைத்துள்ளவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X