அரசியல் செய்தி

தமிழ்நாடு

100 நாள் வேலைக்கு ஊதிய உயர்வு வழங்க காங்.,கோரிக்கை

Added : நவ 25, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:'ஊரக வேலை திட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:மத்திய காங்., கூட்டணி ஆட்சியில், 100 நாள் வேலை திட்டம் கொண்டு வரப்பட்டு, 2006ல் ஒரு நாள் ஊதியம், 65 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. இது படிப்படியாக 2014-ல், 148 ரூபாயாக உயர்ந்தது. 10 ஆண்டுகளில், 14 கோடி மக்கள் வறுமையின்

சென்னை:'ஊரக வேலை திட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:மத்திய காங்., கூட்டணி ஆட்சியில், 100 நாள் வேலை திட்டம் கொண்டு வரப்பட்டு, 2006ல் ஒரு நாள் ஊதியம், 65 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. இது படிப்படியாக 2014-ல், 148 ரூபாயாக உயர்ந்தது. 10 ஆண்டுகளில், 14 கோடி மக்கள் வறுமையின் பிடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டனர். இது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மிகப்பெரிய சாதனையாக கருதப்பட்டது.
மத்திய காங்., கூட்டணி ஆட்சியில், ஊதியம் நிர்ணயிப்பதற்கு அடிப்படையாக, விலைவாசி குறியீட்டு எண் கணக்கில் கொள்ளப்பட்டது. விலைவாசி உயரும்போது ஒரு நாள் ஊதியமும் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
மத்திய அமைச்சகத்தின் வல்லுனர் குழு பரிந்துரை செய்துள்ள, விவசாய தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஒரு நாள் ஊதியமான, 383 ரூபாய் வழங்க, மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் மாநிலங்களுக்கிடையே எவ்வித பாரபட்சமும் இல்லாமல், விலைவாசி குறியீட்டு எண் அடிப்படையில் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
26-நவ-202109:05:36 IST Report Abuse
R.RAMACHANDRAN உச்ச நீதி மன்றம் அரசு வேலையில் இல்லாத குடும்பத்தினருக்கு நூறு நாட்கள் குறைந்தபட்சம் வேலை வாய்ப்பு அளிக்க உத்தரவிட்டது. காங்கிரசு அரசு வாக்கு வங்கிக்காக ஒரு குடும்பத்திற்கு ஒருவருக்கு வேலை என சட்டம் இயற்றி அரசு வேளையில் இருக்கும் குடும்பத்தினர்களையும் பிறரை வேலை வாங்கியே பழக்கப்பட்ட பணக்காரர்களை எல்லாம் சேர்த்து திட்டத்தின் நோக்கத்தையே பாழாக்கியதால் எந்த வேலையும் வாங்காமல் வேலை வாங்கியது போல போலி ஆவணங்கள் உருவாக்கி இரண்டு மணி நேரம் உட்கார வைத்து அனுப்புவதற்கு இரு நூறு ரூபாய் கூலி வழங்கி நாட்டின் பொருளாதாரத்தை சூறையாடச் செய்கின்றனர். ஏழு மணி நேரம் வேலை செய்தால் முழு கூலி என்பதை கடைபிடிக்காமல் முழு கூலி வழங்க மற்றும் வேலை நாட்களை அதிகரிக்கக் கோரி அரசியல்வாதிகள் கூக்குரலிடுகின்றனர் வாக்கு வங்கிக்காக.
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
26-நவ-202101:58:53 IST Report Abuse
Milirvan நூறு நாள் வேலை திட்டத்தில் வேலையை முதலில் கொடுத்து வேலை வாங்குங்கள் என்று சொல்ல வாய் வருதா பாருங்கள்..? வேலையே இல்லாமல் சம்பள உயர்வு வேண்டுமாம்.. எதையாவது சொல்லி அரசியல் செய்ய வேண்டுமல்லவா? நாய்க்கு செய்ய வேலையுமில்லை.. நிற்க நேரமுமில்லை எந்நேரமும் அலைச்சல் என்பது போல..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X