தமிழ்நாடு

இலக்கு தெரியாமல் பயணிக்கும் மாலுமி சிதம்பரத்துக்கு அண்ணாமலை பதிலடி

Added : நவ 25, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை:'ஆயிரம் ஓட்டைகள் இருக்கக்கூடிய கப்பல் உங்கள் கட்சி; அதிலே தத்தளித்து, இலக்கு தெரியாமல் பயணிக்கும் மாலுமி நீங்கள்' என, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்த கருத்துக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பதிலடி தந்துள்ளார்.நகைச்சுவைதமிழகத்தில் திருப்பூர், திருநெல்வேலி உட்பட நான்கு நகரங்களில் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தை, அக்கட்சியின் தேசிய தலைவர்

சென்னை:'ஆயிரம் ஓட்டைகள் இருக்கக்கூடிய கப்பல் உங்கள் கட்சி; அதிலே தத்தளித்து, இலக்கு தெரியாமல் பயணிக்கும் மாலுமி நீங்கள்' என, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்த கருத்துக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பதிலடி தந்துள்ளார்.


நகைச்சுவை

தமிழகத்தில் திருப்பூர், திருநெல்வேலி உட்பட நான்கு நகரங்களில் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தை, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, திறந்து வைத்தார்.இதையடுத்து, 'கட்சி எழும்புகிறதோ இல்லையோ; கட்டடங்கள் எழும்புகின்றன. நான்கு நகரங்களில், மாவட்ட கட்சியின் புதிய, பெருமதிப்புள்ள அலுவலக கட்டடங்களை, ஒரே நாளில் திறக்கும் கட்சிக்கு பாராட்டுகள்' என, காங்., முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விடுத்த அறிக்கை: ஐயா, ஆயிரம் ஓட்டைகள் இருக்கக்கூடிய கப்பல் உங்கள் கட்சி. அதிலே தத்தளித்து, இலக்கு தெரியாமல் பயணிக்கும் மாலுமி நீங்கள். உங்களுடைய நகைச்சுவையை தாண்டி, நாங்கள் வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்று உங்களுக்கு தெரியும்; தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:ஊழல்கள் பல செய்து கட்டடங்களை எழுப்பியதால், சிறையில் இருக்க வேண்டிய நிலையில், பிணையில் இருந்து கட்சியை காலி செய்து, தொண்டர்களை நடு தெருவில் நிறுத்தியவர்கள் காங்., தலைவர்கள். விமர்சனம்இவர்கள், தொண்டர்களுக்காக பெருமதிப்புள்ள கட்டடங்களை அர்ப்பணிக்கும் தலைவர்கள் உள்ள கட்சியை விமர்சனம் செய்வதில் வியப்பில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman - kottambatti,இந்தியா
26-நவ-202106:48:53 IST Report Abuse
Raman நல்ல காமடி பீஸ் கிடைச்சுட்டான் தமிழ்நாட்டுக்கு.. தினமும் காமடி வெடி தான். என்ன ஒத்தை ஓட்டிலேயே இடுக்கை வேண்டியதுதான் ஹா ஹா ஹா
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
26-நவ-202105:46:44 IST Report Abuse
 N.Purushothaman சிவகங்கை சீமானுக்கு இந்த அசிங்கம் தேவையா ?
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
26-நவ-202101:36:32 IST Report Abuse
Milirvan ஆயிரம் ஓட்டை கப்பல், அதிலும் சுக்கான் இல்லாத கப்பல், அதில் மாட்டிக்கொண்டு திக்கு திசை தெரியாமல் பேந்த பேந்த விழிக்கும் மாலுமி என்றெல்லாம் கூறி ஏன் சார் அந்த உடைசலுக்கு தீயும் வைக்கிறீர்கள்? கொஞ்சமும் பாவ பச்சாதாபம் பார்க்க மாட்டீர்களா? .. அவ்வ்வ்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X