அரசியல் செய்தி

தமிழ்நாடு

நகர் புற உள்ளாட்சி தேர்தலில் புதிய தமிழகம் தனித்து போட்டி

Added : நவ 25, 2021
Share
Advertisement
கோவை: ''நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதிய தமிழகம் தனித்து போட்டியிடும்,'' என இக்கட்சியின் தலைவர்டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.கோவையில் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:கோவையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், 92 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், என கூறப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போதும், 100 கோடி ரூபாய் வரை



கோவை: ''நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதிய தமிழகம் தனித்து போட்டியிடும்,'' என இக்கட்சியின் தலைவர்டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.கோவையில் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:கோவையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், 92 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், என கூறப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போதும், 100 கோடி ரூபாய் வரை ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. புதிய தொழில்கள் குறித்து அறிவித்தாலும், செயல்பாட்டுக்கு வருவதில்லை.கோவை தனது தொழில் முகவரியை இழந்து வருகிறது. தொழில் மறு சீரமைப்பதற்கான அறிவிப்புகள் எதுவும் கிடையாது. கோவையில் நடந்து முடிந்த தொழில் முதலீட்டாளர் மாநாட்டினால் சிறு, குறு தொழில்முனைவோருக்கு எவ்வித பலனுமில்லை.எனவே,தொழில் துறையினர் கருத்தை கேட்டறிந்து, 2022, ஜனவரியில் புதிய தமிழகம் சார்பில், 'சாரால்,' கருத்தரங்கு நடத்தப்படும்.தனித்து போட்டி புதிய தமிழகம் கட்சியின் வெள்ளி விழாவையொட்டி டிச.15 முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஒரு பகுதியாக 'உலக இந்துக்கள் ஒருங்கிணைப்பு மாநாடு' நடக்கிறது. இது சிறுபான்மையினருக்கு எதிரானதல்ல.விரைவில், அறிவிக்கப்படவுள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், புதிய தமிழகம் தனித்து போட்டியிடும். யாருடனும் கூட்டணி குறித்து பேசவில்லை.நான் தேசியத்தின் ஒரு முனையில் இருக்கிறேன். திராவிடம் வேறு முனையில் உள்ளது.2026ல் கூட்டணி ஆட்சி அமையும். அதனடிப்படையில் பணியாற்றி வருகிறோம்.தமிழகத்தில் ஆறு மாத தி.மு.க.. ஆட்சிக்கு வெறும் புகைப்படங்களே சாட்சியாகும். அரசின் விளம்பர துறை சிறப்பாக செயல்படுகிறது.சிறப்பு திட்டம் தேவை கோவை, திருப்பூர் தொழில் வளத்தை மேம்படுத்த கோவை -- - திண்டுக்கல் சாலையை, ஆறு அல்லது எட்டு வழி சாலையாகவும். கோவை- - திருச்சி சாலையை எட்டு வழி சாலையாகவும் மாற்ற வேண்டும்.தமிழத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, பொங்கல் தொகுப்புடன், ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.எஸ்.எஸ்.ஐ., பூமிநாதன் கொலையில் கைதாகியுள்ள மூவரில் இருவர் சிறுவர்களாவர். இவர்களால் பூமிநாதனை எப்படி கொலை செய்ய முடியும் என்பதை அரசு கூறவேண்டும்.போலீசார் தங்கள் பாதுகாப்பிற்காக துப்பாக்கியை கையாளவேண்டும், என்ற உத்தரவு புதிய சிக்கலை ஏற்படுத்தும்.இவ்வாறு, டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X