பதற்றமான சூழலில் மீண்டும் தைவானுக்கு செல்லும் அமெரிக்க எம்.பி.,க்கள்!

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
தைவானுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டு வரும் நிலையில், அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் 5 உறுப்பினர்கள் நாளை (நவ., 26) தைவான் செல்கிறார்கள்.தைவானில் ஜனநாயக முறையிலான அரசு உள்ளது. சீனாவைப் போல மாண்டரின் மொழி பேசும் தைவான் மக்கள் 1949 உள்நாட்டுப் போரின் போது சீன கம்யூனிஸ்ட் கட்சியை தோற்கடித்தார்கள். பின்னர் தங்களுக்கான அரசாங்கத்தை

தைவானுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டு வரும் நிலையில், அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் 5 உறுப்பினர்கள் நாளை (நவ., 26) தைவான் செல்கிறார்கள்.latest tamil newsதைவானில் ஜனநாயக முறையிலான அரசு உள்ளது. சீனாவைப் போல மாண்டரின் மொழி பேசும் தைவான் மக்கள் 1949 உள்நாட்டுப் போரின் போது சீன கம்யூனிஸ்ட் கட்சியை தோற்கடித்தார்கள். பின்னர் தங்களுக்கான அரசாங்கத்தை அவர்களே அமைத்துக் கொண்டனர். இருப்பினும் தைவானை சீனா தங்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என கூறி வருகிறது. கடந்த சில மாதங்களாக தைவான் சீனா இடையே பதற்றமான சூழலே நிலவுகிறது.சீனாவை சமாளிக்க தைவானிடம் அமெரிக்கா நட்பு பாராட்டி வருகிறது.

அந்நாட்டு ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்களையும் வழங்குகிறது. இதனை சீனா ரசிக்கவில்லை. இம்மாத தொடக்கத்தில் அமெரிக்க எம்.பி.,க்கள் தைவானுக்கு ராணுவ விமானத்தில் வந்தனர். அதனைத் தொடர்ந்து சீனா தைவான் ஜலசந்தியை நோக்கி போர் தயார்நிலையிலான ரோந்து பயிற்சியை செய்தது.


latest tamil newsஇந்நிலையில் கிழக்காசிய நாடுகளான ஜப்பான் மற்றும் வடகொரியாவில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் 5 அமெரிக்க எம்.பி.,க்கள் மீண்டும் நாளை தைவானுக்கு செல்கின்றனர். அங்கு அதிபர் சாய் இங் வென்னை சந்தித்து தைவான் பாதுகாப்பு, பொருளாதார வாய்ப்புகள், பிராந்திய நிலைத்தன்மை போன்றவை குறித்து விவாதிப்பார்கள் என தெரிகிறது. முன்னதாக அமெரிக்கா, டிச., 9, 10-ல் நடக்கும் ஜனநாயகம் தொடர்பான ஆன்லைன் மாநாட்டில் பங்கேற்க தைவானுக்கு அழைப்பு விடுத்தது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
26-நவ-202117:06:19 IST Report Abuse
மலரின் மகள் அமெரிக்கா உலகின் ஆச்சரியமான நிர்வாக அமைப்பை கொண்டுள்ள தேசம். யுடிலிடேரியன் தியரியை பயன்படுத்துபவர்களாக இருக்கும் அவர்களது நிர்வாகம். மீ மீ அண்ட் மீ தான் அவர்களின் மொத்த நோக்கம். தங்களுக்கான சிறப்பான லாபத்திற்காகவே அனைத்தையும் சேர்வார்கள். நீதிநெறி என்பதான தியரியை அவர்கள் நாடவில்லை. உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல்களை வைத்து அரசியல் செய்து வந்தார்கள். அதிக வளம் மிக்க தேசங்கள் தொடர் சிக்கலில் இருந்து கொண்டே இருந்தன. உலகின் அனைத்து பகுதிகளிலும் அவ்ரகளி ராணுவ படைப்பிரிவுகள் கப்பற்படைகள் உண்டு. அதை வைத்து ஒரு தேசத்திற்கு பாதுகாப்பு தருகிறேன் என்று சொல்லி அந்த தேசத்திற்கு அருகாமையிலிருக்கும் தங்களுக்கு சகாயமாக இல்லாத அல்லது போட்டியாளர்களாக கருதும் தேசத்திற்கு செக் வைக்கிறேன் என்று சொல்லி ஒருவிதத்தில் மிரட்டல் தொனியில் இருப்பார்கள். உலகின் அனைத்து போர்களிலும் இவர்களின் ஆதிக்கமும் உண்டு. உலகையே மிரட்டி கொண்டு வந்தவர்களுக்கு செல்வந்த தேசங்கள் தங்களின் சுகவாழ்விற்கு தேச நலனுக்கு குந்தகம் வரக்கூடாது என்று பொருளுதவியை அமெரிக்காவிற்கு செய்து அமைதியாக இருக்க விளைவார்கள். இருந்தாலும் அஞ்சுபவர்களை கண்டு மேலும் அஞ்ச வைத்து நிறைய உறிஞ்சிக்கொள்வார்கள். அவர்கள் சொல்வது தான் சட்டம் அதுவே நியாயம் என்ற நிலைப்பாடு அவர்களுக்கு. நிறைய பணம் வைத்திருப்பவர்கள் வழிப்பறி கொள்ளையனுக்கும் பேட்டை ரவுடிகளுக்கு அஞ்சுவார்கள். ஒன்றுமில்லாதவரால் அவர்களை கண்டு கொள்வதில்லை. வரலாறு ஒரே மாதிரி இருக்காது உலகெங்கிலும் எல்லா காலத்திலும் என்ற உண்மையை சரித்திரம் நமக்கு சொல்லிக்கொண்டே தான் இருக்கிறது. மிரட்டுபவர்களை கண்டு அஞ்சுவோரை தான் மிரட்டு பவர்கள் தொடர்ந்து மிரட்டுவார்கள். பதிலுக்கு எதிர்த்து நின்று மிரட்டினால், அஞ்சி நடுங்கி ஓடுபவர்கள் அவர்களாகத்தான் இருக்கும். அது போன்றோரை பொருளாதார தடை அரசியல் அழுத்தங்கள் என்று வேறு வகையில் முயற்சிப்பார்கள். இதையெல்லாம் கண்டு கொள்ளாத தேசங்களை கண்டு அமெரிக்கா உண்மையில் அஞ்சி கொண்டுதான் இருக்கிறது. எங்கே வடகொரியா தங்கள் தேசத்தை நெருங்கும் ஏவுகணைகளைஉற்பத்தி செய்துவிடுமோ என்ற அச்சம். அப்படி செய்தால் அணுகுண்டை வீசி விடும் என்று அஞ்சி அஞ்சியே வாழ்க்கை அவர்களது. ஆப்கானை வெல்ல முடியவில்லை. தோல்வியால் திரும்பி விட்டார்கள். லாபம் எதுவும் இல்லையாம். ஈரானில் எவ்வளவோ செய்து பார்க்கிறார்கள். நேரடியாக யுத்தத்திற்கு செல்லமாட்டார்கள். ஆளில்லா விமானம் மூலம் குறிப்பிட்ட சிலரை கொலை செய்யத்தான் முடியும். நேரிடையான யுத்தத்தில் அமெரிக்க ஒன்றும் பெரிய வெற்றிகளை குவித்ததாக தெரியவில்லை. இப்போது அமெரிக்காவிற்கு பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக சீன அச்சுறுத்தலாக இருக்கிறது. அதாவது நம்பர் ஒன்னு நாங்கள் தான் என்று சொல்லி கொண்டிருந்தவர்களை நீங்கள் நம்பர் ஒன்னு இல்லை என்று சீன சொல்கிறது கண்கூடு. மேலும் அமெரிக்காவின் ஆதரவு நாடுகளை விட சீனா சொல்வதை சர்வதேச அரங்கில் கேட்கும் நாடுகள் மிக அதிகம். அவையெல்லாம் ஏழ்மையில் இருந்து மேலே வேண்டிய நிலையில் இருக்கும் தேசங்கள். ஆகையால் அமெரிக்கா சீனாவிற்கு பல்வேறு வகையில் செக் என்றவகையில் அழுத்தம் கொடுக்க முயல்கிறது. சீன அமெரிக்காவை கண்டு அஞ்சவில்லை என்பதால் அமெரிக்க சீனாவை அம்சமாகவே பார்க்கிறது. அமெரிக்காவிற்கு புரியவைப்பதற்காக தங்களின் ஏவுகணைகள் அமெரிக்கா முழுதும் செல்லவில்லை என்று சோத்தித்து காட்டுகிறது. தங்களிடம் அணுஆயுதங்கள் நிரம்ப இருக்கின்றன என்று சொல்கிறது. இதன் மூலம் அமெரிக்கா ஒதுங்கி இருக்கும் என்று சீன கருதுகிறது. அமெரிக்காவிற்கு இப்போது நல்ல அனுகூலம் சீனாவின் அருகிலேயே அவரலால் இருக்க முடிகிறது. ஜப்பான், தைவான், இந்தியா போன்ற தேசங்களின் மூலம் சீனனை கூண்டுக்குள்ளேயே வைத்திருக்கிறது. தைவான் அமெரிக்காவை பக்கத்தில் வைத்து கொண்டு சீனனை தள்ளியே இருக்கும் படி செய்து கொள்ளவேண்டும். யுத்தம் என்ற வலையில் மாட்டி கொள்ளக்கூடாது. இழப்புக்கள் தைவானுக்கு இருக்கும் அதைவிட நஷ்டம் சீனாவிற்கு இருக்கும். போர் சூழல் இருப்பதாகவே காட்டி கொள்வார்கள். ஆனால் யுத்தம் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டிய நிலையில் தைவான் இருக்கிறது. யுத்தம் தவிர்க்க முடியாததாக இருந்தால் சீனாவுடனான யுத்தம் தைவான் சீன யுத்தமாக இல்லாமல் தென் சீனக்கடல் யுத்தமாக மாற்றி விடவேண்டும். அப்போது சீனாவை, பல தேசங்கள் எதிர்க்கும். ஜப்பான், ஆஸ்திரேலிய, அமெரிக்க, பிலிபின்ஸ் என்ற தேசங்களுடன் தைவானும் சீனாவை யுத்தம் செய்யவேண்டும். அப்போது யுத்தத்தில் வெற்றி தோல்வி என்று யாருக்கும் இல்லாமல், சீனன் நோக்கமான தைவானை பிடிப்பது என்பது கனவாகவும் அதனால் தைவானுக்கு வெற்றி சீனாவிற்கு தோல்வி என்று நோக்கம் நிறைவேறாததை வைத்து சொல்லலாம். அபப்டி நடக்கும் பொது தைவானை விட சீனாவிற்கான நஷ்டம் மிக மிக அதிகமாக இருக்கும்.
Rate this:
Cancel
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
26-நவ-202107:04:44 IST Report Abuse
Gokul Krishnan அமெரிக்காவின் பருப்பு எல்லாம் ஆப்கானிஸ்தான் விசயத்தில் ஊசி போயி நாறி விட்டது சீனா அமெரிக்கா கண்ணில் மண்ணை தூவும் நடப்பது பிடென் ஆட்சி டிரம்ப் ஆட்சி இல்லை சீனாவிடம் அமெரிக்கா சமரசம் செய்யும்
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
26-நவ-202106:00:14 IST Report Abuse
Kasimani Baskaran சீனா எலெக்ட்ரானிக் துறையில் முன்னேற ஒரு காலத்தில் உதவி செய்தது தைவான் தான். இருந்தும் சீனா நன்றிகெட்டதனமாக இன்று அவர்களை மிரட்டுவது துரதிஷ்டம். சர்வதேச சட்டங்களுக்கு சவால் விடுவது போல தென் சீனக்கடல் பகுதியையே சீனா தனக்குத்தான் சொந்தம் என்று பல நாடுகளுடன் மல்லுக்கட்டுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X