பொது செய்தி

இந்தியா

கடலோர பகுதிகளை பாதுகாக்க 300க்கும் அதிகமான பயிற்சிகள்

Added : நவ 25, 2021
Share
Advertisement
புதுடில்லி:''மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின், கடந்த 13 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட கடலோர பாதுகாப்பு பயிற்சிகளை மாநில அரசுகளுடன் இணைந்து நடத்தி உள்ளோம்,'' என, கடலோர காவல் படையின் இயக்குனர் ஜெனரல் நடராஜன் தெரிவித்தார்.கடந்த 2008 நவ., 26ம் தேதி மஹாராஷ்டிராவின் மும்பை நகருக்குள் பாக்., பயங்கரவாதிகள் கடல் வழியாக புகுந்தனர்.ரயில் நிலையம், ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு

புதுடில்லி:''மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின், கடந்த 13 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட கடலோர பாதுகாப்பு பயிற்சிகளை மாநில அரசுகளுடன் இணைந்து நடத்தி உள்ளோம்,'' என, கடலோர காவல் படையின் இயக்குனர் ஜெனரல் நடராஜன் தெரிவித்தார்.
கடந்த 2008 நவ., 26ம் தேதி மஹாராஷ்டிராவின் மும்பை நகருக்குள் பாக்., பயங்கரவாதிகள் கடல் வழியாக புகுந்தனர்.ரயில் நிலையம், ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர்கள்நடத்திய பயங்கர தாக்குதலில் 166 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நடந்து இன்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இந்நிலையில் டில்லியில் நடந்த தேசிய கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வாரிய கூட்டத்தில் பங்கேற்ற கடலோர காவல் படையின் இயக்குனர் ஜெனரல் நடராஜன் கூறியதாவது:மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பின், மாநிலங்களுடன் இணைந்து 300க்கும் மேற்பட்ட கடலோர பாதுகாப்பு பயிற்சிகளை நடத்தி உள்ளோம்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இந்த பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. சில நேரங்களில் இரண்டு கடலோர மாநிலங்களை இணைத்து பயிற்சி நடத்தப்படுகிறது. இதன் வாயிலாக பயங்கரவாத ஊடுருவல் மற்றும் தாக்குதல்களை சமாளிப்பது குறித்து அனைத்து கடலோர மாநிலங்களும் தயார் நிலையில் உள்ளன.இணைந்து செயல்படு தல் மற்றும் ஒருங்கிணைப்பு இருந்தால் மட்டுமே, மும்பை தாக்குதலை போல மீண்டும் ஒரு சம்பவத்தை தவிர்க்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X