தமிழ்நாடு

ஜாமினில் வந்தார் மனோஜ்

Added : நவ 25, 2021
Share
Advertisement
குன்னுார்: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இரண்டாவது நபராக குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜ் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.நீலகிரி மாவட்டம், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, வாளையார் மனோஜூக்கு கடந்த ஆகஸ்ட்டில், ஊட்டி மாவட்ட கோர்ட்டில் ஜாமின் வழங்கிய போது, ஜாமின் உத்தரவாதம் அளிக்க யாரும் முன்வரவில்லை.மீண்டும் நிபந்தனைகளை தளர்த்தி, ஜாமின் கோரி

குன்னுார்: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இரண்டாவது நபராக குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜ் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.நீலகிரி மாவட்டம், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, வாளையார் மனோஜூக்கு கடந்த ஆகஸ்ட்டில், ஊட்டி மாவட்ட கோர்ட்டில் ஜாமின் வழங்கிய போது, ஜாமின் உத்தரவாதம் அளிக்க யாரும் முன்வரவில்லை.மீண்டும் நிபந்தனைகளை தளர்த்தி, ஜாமின் கோரி அவரது வக்கீல் முனிரத்னம் மாவட்ட கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இதன் மீது நடந்த விசாரணையில், 50 ஆயிரம் சொத்து மதிப்பும், ரத்த சொந்தங்கள் இருவர் உத்தரவாதம் வழங்க, நீதிபதி சஞ்சய்பாபா உத்தரவிட்டிருந்தார்.இந்த உத்தரவில் தளர்வு கோரி வாளையாறு மனோஜ் தரப்பில், செப்.,23ல் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு, அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவித்த போதும், வாளையார் மனோஜின் மனைவி இருக்கும் பகுதியை சேர்ந்த மற்றொருவர், பிணையாளராக இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 23ல், பிணையதாரர்கள் ஆவணங்களுடன் நீதிமன்றத்திற்கு வந்தனர்.இதனை ஏற்று, 'வாளையார் மனோஜ் ஊட்டியை விட்டு வேறு எங்கும் செல்ல கூடாது; திங்கள் தோறும், ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும்,' என, தெரிவித்து ஜாமின் வழங்கி, நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார். இதையடுத்து, குன்னுார் கிளைச்சிறையிலிருந்து வாளையார் மனோஜ் ஜாமினில் வெளியே வந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X