செய்தி செய்தி

தமிழ்நாடு

நடைபாதையில் மழைநீர் குட்டைகள் நடமாட முடியாமல் தடுமாறும் மக்கள்

Added : நவ 25, 2021
Share
Advertisement
திருப்பூர்: நடைபாதைகளில், மழைநீர் குட்டை போல் தேங்கி நிற்பதால், மண் கொட்டி சமன்செய்து கொடுக்க வேண்டுமென, வசந்தம் நகர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.திருப்பூர் ஒன்றியம், மங்கலம் ஊராட்சி, அக்ரஹாரப்புத்துார் - வசந்தம் நகரில், 150க்கும் அதிகமான வீடுகள் உள்ளன.வீட்டுமனை அமைத்த போது, மெயின் ரோட்டின் மட்டம் தார்தளம் அமைக்கப்பட்டது. கடந்த, 15 ஆண்டுகளாக, அப்பகுதியில் அடிப்படை வசதி

திருப்பூர்: நடைபாதைகளில், மழைநீர் குட்டை போல் தேங்கி நிற்பதால், மண் கொட்டி சமன்செய்து கொடுக்க வேண்டுமென, வசந்தம் நகர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.திருப்பூர் ஒன்றியம், மங்கலம் ஊராட்சி, அக்ரஹாரப்புத்துார் - வசந்தம் நகரில், 150க்கும் அதிகமான வீடுகள் உள்ளன.வீட்டுமனை அமைத்த போது, மெயின் ரோட்டின் மட்டம் தார்தளம் அமைக்கப்பட்டது. கடந்த, 15 ஆண்டுகளாக, அப்பகுதியில் அடிப்படை வசதி செய்யப்படவில்லை.மழைநீர் வடிகால் வசதி இல்லாததால், சிறிய மழை பெய்தாலும், மழைநீர் குளம் போல் தேங்கிவிடுகிறது. அப்பகுதி, களிமண் பூமியாக இருப்பதால், தண்ணீர் பல நாட்களாகியும், வடியாமல் தேங்கி நிற்கிறது.பொதுமக்கள், 'டூ வீலரில்' சென்றுவர முடியாமலும், நடமாட முடியாமலும் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். இருபுறமும், அதிக அளவு புதர்மண்டியுள்ளதால், பாம்பு நடமாட்டம் அதிகரித்துள்ளது.இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், 'பொதுமக்கள் நலன்கருதி, மழைநீர் வடிகால் மற்றும் புதிய தார்ரோடு அமைத்து கொடுக்க வேண்டும்.தற்போது, குளம் போல் மழைநீர் தேங்கி நிற்பதால், மக்கள் நடமாட வசதியாக, நடைபாதையில் மட்டும், மண் கொட்டி சமன்செய்து கொடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X