குண்டு வெடிப்பு எட்டு பேர் சாவு

Added : நவ 25, 2021
Share
Advertisement
மொகதீசு:சோமாலியா நாட்டில் பள்ளி வளாகத்தில் குண்டு வெடித்து எட்டு பேர் உயிரிழந்தனர்.கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள சோமாலியா தலைநகர் மொகதீசு நகரில் உள்ள பள்ளி வளாகத்தில் நேற்று குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் உட்பட எட்டு பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். காயம் அடைந்த 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அல் - குவைதா அமைப்புடன் தொடர்புடைய

மொகதீசு:சோமாலியா நாட்டில் பள்ளி வளாகத்தில் குண்டு வெடித்து எட்டு பேர் உயிரிழந்தனர்.
கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள சோமாலியா தலைநகர் மொகதீசு நகரில் உள்ள பள்ளி வளாகத்தில் நேற்று குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் உட்பட எட்டு பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். காயம் அடைந்த 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அல் - குவைதா அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. ஆப்ரிக்க யூனியன் அமைதிப்படை அதிகாரிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அல்ஷபாப் கூறியுள்ளது. அமைதிப் படையினர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனக் கோரி வரும் பயங்கரவாதிகள், மொகதீசு நகரில் அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர்.

வரும் ஆண்டின் துவக்கத்தில் அமைதிப்படை வெளியேறும் என அமெரிக்கா கூறியுள்ள நிலையில், பாதுகாப்பு பொறுப்பை ஏற்க சோமாலியா ராணுவம் தயாராக இல்லை. எனவே அமைதிப்படை இருப்பு நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X