செய்தி செய்தி

தமிழ்நாடு

அரசு நிலத்தில் அமைக்கப்பட்ட குடிசைகள் அகற்றம்!

Added : நவ 25, 2021
Share
Advertisement
அவிநாசி: வீட்டுமனைப்பட்டா கேட்டு அரசு நிலத்தில், குடிசை அமைத்து, குடியேறியவர்கள் நேற்று வெளியேற்றப்பட்டனர்.அவிநாசி ஒன்றியம், தெக்கலுார் ஊராட்சி, காமநாயக்கன்பாளையம், ஆதிதிராவிடர் காலனியில், 120க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஒவ்வொரு வீடுகளிலும், மூன்று, நான்கு குடும்பத்தினர் வசித்து வருவதால், தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என தொடர்ந்து

அவிநாசி: வீட்டுமனைப்பட்டா கேட்டு அரசு நிலத்தில், குடிசை அமைத்து, குடியேறியவர்கள் நேற்று வெளியேற்றப்பட்டனர்.அவிநாசி ஒன்றியம், தெக்கலுார் ஊராட்சி, காமநாயக்கன்பாளையம், ஆதிதிராவிடர் காலனியில், 120க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஒவ்வொரு வீடுகளிலும், மூன்று, நான்கு குடும்பத்தினர் வசித்து வருவதால், தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என தொடர்ந்து மனு வழங்கி வந்தனர்.இருப்பினும், அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை. இதனால், அப்பகுதி மக்கள், தெக்கலூர் அருகே அய்யன் கோவில் பின், புறம்போக்கு நிலத்தில்குடிசை அமைத்து, குடியேறினர். 'ஜல்லி பாதை' என வகைப்படுத்தப்பட்ட, மழைநீர் தேங்கக்கூடிய, அந்த இடத்தில் அமைக்கப்பட்ட குடிசைகளை அகற்ற வேண்டும் என, வருவாய் துறையினர் பல முறை எச்சரித்தும், மக்கள் காலி செய்ய முடியாது என மக்கள் கூறினர்.இதனால், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சந்திரசேகர் முன்னிலையில், தாசில்தார் ராகவி, டி.எஸ்.பி., பவுல்ராஜ் மற்றும் அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். இருப்பினும், யாரும் காலி செய்யாததால், குடிசைகளை அப்புறப்படுத்த பொக்லைன் வாகனம், இடையூறு செய்பவர்களை கைது செய்ய போலீஸ் வாகனம் ஆகியவற்றுடன், ஏராளமான போலீசார் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.'மாற்றிடம் ஏற்பாடு செய்யும் வரை குடிசைகளை காலி செய்ய முடியாது,' என மக்கள் கூறினர். அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.'வீட்டுமனை தேவைப்படுவோர், தனித்தனியாக விண்ணப்பம் வழங்குமாறும், அவற்றை மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுடன் பரிசீலித்து மாற்று இடத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என, அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பின், குடிசை அமைத்தவர்களே, அவற்றை அப்புறப்படுத்தி கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X