தென் கொரியாவில் நாய்க்கறிக்கு தடை?

Added : நவ 25, 2021
Share
Advertisement
சியோல்:'நாய்க் கறி விற்பனையை தடை செய்வது குறித்து, சம்பந்தப்பட்ட துறையினரிடம் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, அனைத்து பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும்' என, தென் கொரியா அறிவித்துள்ளது. கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த தென் கொரியாவில், ஆண்மையைப் பெருக்கும் என்ற நம்பிக்கையில், நாய்க் கறி விரும்பி உண்ணப்படுகிறது. ஆனால், தற்போது இளைய சமுதாயத்திடம் நாய் போன்ற செல்லப்
தென் கொரியாவில்  நாய்க்கறிக்கு தடை?

சியோல்:'நாய்க் கறி விற்பனையை தடை செய்வது குறித்து, சம்பந்தப்பட்ட துறையினரிடம் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, அனைத்து பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும்' என, தென் கொரியா அறிவித்துள்ளது.

கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த தென் கொரியாவில், ஆண்மையைப் பெருக்கும் என்ற நம்பிக்கையில், நாய்க் கறி விரும்பி உண்ணப்படுகிறது. ஆனால், தற்போது இளைய சமுதாயத்திடம் நாய் போன்ற செல்லப் பிராணிகளை வளர்க்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. அதனால் 10 - 20 ஆண்டுகளுக்கு முன், லட்சக்கணக்கான நாய்கள் உணவுக்காக கொல்லப்பட்ட நிலையில், தற்போது ஓராண்டில் 10 - 15 லட்சம் நாய்கள் மட்டுமே கொல்லப்படுகின்றன.

இந்நிலையில் பிராணி நல ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று, 'நாய்க் கறி விற்பனைக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்' என, தென் கொரிய அதிபர் மூன் ஜே - இன் சமீபத்தில் அறிவித்தார்.இதற்கு நாய்ப் பண்ணையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நாய்க் கறிக்கு தடை விதிப்பது குறித்து பல தரப்பட்டோரிடம் கருத்து கேட்க, ஏழு அமைச்சகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து துறை பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும் என, தென் கொரிய அரசு அறிவித்துள்ளது.

இக்குழு, நாய் பண்ணையாளர்கள், நாய்க் கறி உண்போர், பிராணி நல ஆர்வலர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடம் கருத்து, கேட்டு அரசுக்கு அறிக்கை அளிக்கும். அதன் அடிப்படையில் நாய்க் கறி விற்பனை தொடர்பாக அரசு முடிவெடுக்கும்.அரசின் இந்த முடிவுக்கு பிராணி நல ஆர்வலர்களும், நாய்ப் பண்ணையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X