செய்தி செய்தி

தமிழ்நாடு

இல்லம் தேடி கல்வி திட்டம் கலைக்குழு பிரசாரம் துவக்கம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில். 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தின் கலைக்குழு தனது, 35 நாட்கள் விழிப்புணர்வு பிரசார பயணத்தை துவக்கியது.கொரோனா ஊரடங்கால், மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடுசெய்ய, இல்லம் தேடி கல்வி திட்டத்தை கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வை மாவட்டம் முழுவதும் மேற்கொள்ள, 13 கலைக்குழுக்கள்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில். 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தின் கலைக்குழு தனது, 35 நாட்கள் விழிப்புணர்வு பிரசார பயணத்தை துவக்கியது.கொரோனா ஊரடங்கால், மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடுசெய்ய, இல்லம் தேடி கல்வி திட்டத்தை கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வை மாவட்டம் முழுவதும் மேற்கொள்ள, 13 கலைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஒரு குழுவிற்கு, 9 பேர் வீதம் ஒன்றியம் வாரியாக குடியிருப்பு பகுதிகள், பள்ளிகளுக்கு சென்று ஆடல், பாடல், நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவர். இதற்கான பிரசார பயணத்தை கலெக்டர் வினீத் துவக்கி வைத்தார்.முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ்வரி, கல்வித்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.ஒருங்கிணைப்பாளர்களிடம் கேட்டபோது, 'ஒரு நாளைக்கு, 2 பொது இடங்கள், 2 பள்ளிகள் வீதம் இக்கலைக்குழுவினர் பிரசாரம் செய்வர். தொடர்ந்து, 35 நாட்கள், 70 பள்ளிகள், 70 குடியிருப்புகளில் களப்பணியாற்ற திட்டமிட்டுள்ளோம். கரகம், ஒயிலாட்டம், தவில் இசை, தப்பாட்டம், பொம்மலாட்டம், உள்ளிட்ட பல்வேறு கிராமிய கலைகள் மூலமாக இத்திட்டம் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X