செய்தி செய்தி

தமிழ்நாடு

விலைவாசி உயர்வை கண்டித்து காங்., கட்சியினர் பிரசார பயணம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
பல்லடம்: விலைவாசி உயர்வை கண்டித்து, பல்லடத்தில், காங்., கட்சியினர் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டனர்.திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கோபி தலைமை வகித்தார். தமிழக காங்., கமிட்டி சிறப்பு பார்வையாளர் மணி, நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்டார தலைவர்கள் புண்ணியமூர்த்தி, கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து, கோஷங்கள்

பல்லடம்: விலைவாசி உயர்வை கண்டித்து, பல்லடத்தில், காங்., கட்சியினர் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டனர்.திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கோபி தலைமை வகித்தார். தமிழக காங்., கமிட்டி சிறப்பு பார்வையாளர் மணி, நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்டார தலைவர்கள் புண்ணியமூர்த்தி, கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து, கோஷங்கள் எழுப்பியபடி, செட்டிபாளையம் பிரிவிலிருந்து, திருச்சி ரோடு, என்.ஜி.ஆர்.ரோடு, மங்கலம் ரோடு வழியாக நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.அதன்பின், நகராட்சி அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. செயல் தலைவர் மணிராஜ், மகிளா காங்., தலைவர் ஜானகி, பொங்கலுார் வட்டார தலைவர் தியாகு உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X